எல்லாரும் விஜயாக முடியாது..அட்லீ போட்ட தப்புக் கணக்கு.. மீண்டும் முதல்ல இருந்தா?
அட்லீ:
தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக இருப்பவர் இயக்குனர் அட்லீ. இப்போது ஹிந்தியில் பிஸியாக இருக்கும் அட்லீ இயக்குனர் சங்கரிடம் உதவியாளராக இருந்தவர். பின் இயக்குனராக மாறினார். ராஜா ராணி திரைப்படம்தான் இவர் இயக்கிய முதல் திரைப்படம். அதன் பின் பிகில், மெர்சல், தெறி என தொடர்ந்து விஜயை வைத்து மூன்று பிளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தார்.
அதன்மூலம் முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் இடம் பிடித்தார் அட்லீ. விஜயை வைத்து அவர் எடுத்த மூன்று படங்களுமே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல ஒரு வரவேற்பை பெற்றன. அதற்கு அடுத்தபடியாக எந்த ஹீரோவை வைத்து படம் எடுக்க போகிறார் என காத்திருந்த நேரத்தில் திடீரென பாலிவுட் பக்கம் சென்றார். அங்கு ஷாரூக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை எடுத்து பெரிய ப்ளாக் பஸ்டர் வெற்றியை கொடுத்தார்.
தெறி வசூல்:
அதனை அடுத்து தயாரிப்பு பணியிலும் இறங்கினார். தமிழில் அவர் இயக்கி விஜய் நடித்த தெறி படத்தை இந்தியில் பேபி ஜான் என்ற பெயரில் தயாரித்தார் அட்லீ. இந்தப் படத்தை காளீஸ் என்பவர் இயக்கினார். தமிழில் தெறி படம் 75கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 150 கோடி வசூலை பெற்றது. விஜய்க்கு இருந்த மாஸ் கிரேஸ் என படம் பட்டையை கிளப்பியது. அதனால் அதன் ஹிந்தி ரீமேக்கும் அதே மாதிரியான வசூலை பெறும் என நினைத்தாரோ என்னவோ?
படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. கிறிஸ்துமஸ் ரிலீஸாக பேபி ஜான் படம் கடந்த 25 ஆம் தேதி ரிலீஸானது. இந்தப் படத்தில் சல்மான் கான் கேமியோ ரோலில் நடித்திருந்தார். அதனால் முதல் நாள் சல்மான் கானுக்காக 11. 25 கோடி வசூல் பெற்றது. அடுத்தடுத்து வசூல் குறைய ரிலீஸாகி மூன்று நாள்கள் இறுதியில் மொத்த வசூலே 20 கோடிக்கும் குறைவாகத்தான் இருப்பதாக சொல்லப்படுகிறது.
கோடம்பாக்கம் பக்கம்:
அதனால் முதல் தயாரிப்பு படமே அட்லீக்கு திருப்தியை தரவில்லை என்பதால் மீண்டும் கோடம்பாக்கம் வந்து நடிகர்களை தேடும் பணியில் ஈடுபடுவாரா என இங்குள்ள ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.