×

மொட்டை தலை, வெட்டுத் தழும்பு... இடுப்பில் பிஸ்டல்... மிரட்டும் பகத் பாசில்

பகத் பாசிலின் வில்லன் தோற்றத்தை வெளியிட்டிருக்கிறார்கள். மொட்டைத் தலை, அதில் வெட்டுத் தழும்பு என மனிதர் பார்வையிலேயே மிரட்டுகிறார். 
 
basil

இந்தியாவின் சமகால நடிகர்களில் முதல்வரிசையில் வரக்கூடியவர் பகத் பாசில்  எந்த வேடத்தையும் அசால்டாக செய்பவர். இந்த வருடம் ஓடிடியில் வெளியான அவரது ஜோஜி, மாலிக் படங்கள் அவரது நடிப்புத் திறனை இந்தியா முழுக்கக் கொண்டு சேர்த்தது. 

சோகம் என்னவென்றால், இதுபோன்ற நல்ல நடிகர்களை மாஸ் ஹீரோக்களின் படங்களில் வில்லனாக்கி வீணடிப்பார்கள். மாஸ்டரில் விஜய்சேதுபதி ஸ்கோர் செய்தது போல், அந்த முட்டுச் சந்திலும் முத்திரைப் பதிப்பவர்கள் இருக்கிறார்கள். பகத்தும் அதில் ஒருவர். 

புஷ்பா பகத் பாசிலின் முதல் தெலுங்குப் படம். அல்லு அர்ஜுன் ஹீரோ. இயக்கம் சுகுமார். புஷ்பா அறிமுக டீஸர் என்று ஒன்றை முன்பு வெளியிட்டார்கள். அதில் அல்லு அர்ஜுன் எகிறி அடிக்கும் ஆக்ஷன் காட்சிக்காக மறுபடி மறுபடி அதனைப் பார்த்து நம்பர் ஒன் இடத்துக்கு டீஸரை கொண்டு வந்தார்கள் ரசிகர்கள். 

bagath
இப்போது பகத் பாசிலின் வில்லன் தோற்றத்தை வெளியிட்டிருக்கிறார்கள். மொட்டைத் தலை, அதில் வெட்டுத் தழும்பு என மனிதர் பார்வையிலேயே மிரட்டுகிறார். 

புஷ்பாவில் அல்லு அர்ஜுன் செம்மரக்கடத்தல்காரராக நடித்திருப்பதாக கூறப்படுகிறது. பகத்தின் இடுப்பில் இருக்கும் பிஸ்டலில் இருந்து, அவர் அதிகாரியாக நடிப்பதை யூகிக்க முடிகிறது. டிசம்பரில் புஷ்பாவின் முதல் பாகம் வெளியாகிறது. 

இரண்டாவது பாகம் அடுத்த வருடம் வெளியாகிறது. அல்லு அர்ஜுனுக்கு கேரளாவில் ரசிகர்கள் அதிகம். பகத்தும் இருப்பதால் கேரளாவில் படம் பட்டையை கிளப்ப வாய்ப்புள்ளது. அதற்குள் கேரளாவில் கொரோனா கட்டுக்குள் வர வேண்டும்.

From around the web

Trending Videos

Tamilnadu News