Connect with us

Cinema News

வீணாக வாயை கொடுத்து பயில்வானிடம் வாங்கி கட்டிக்கொண்ட சூரி.. அப்படி என்னதான் சொன்னார் தெரியுமா.?

கார்த்தி நடிப்பில் வரும் வாரம் ரிலீசாக உள்ள திரைப்படம் விருமன். இத்திரைப்படத்தை கொம்பன் பட இயக்குனர் முத்தையா இயக்கியுள்ளார். அதிதி சங்கர் இப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். மேலும் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ்,  சூரி, இளவரசு என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் சூரி, சூர்யாவை மிகவும் புகழ்ந்து பேசினார். மேலும், குறிப்பாக கோயில்கள் கட்டுவதை விட சூர்யா சார் போல அறக்கட்டளை மூலம் நாலு பேர் கல்விக்கு உதவுவது மிகவும் பெரிய விஷயம் என்று குறிப்பிட்டு பேசினார்.

இந்த பேச்சு தான் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. பலர் அக்கருத்தை ஆதரித்தாலும், சிலர் எதிர்க்கவும் செய்கின்றனர். அதில் சினிமா மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், தனது வீடியோவில் மிகவும் காட்டமாக இதனை தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்களேன் – ஷங்கர் இனி தப்பிக்கவே முடியாது… இந்தியன் 2வுக்கு வந்துதான் ஆகணும்… வெளியான ஷாக்கிங் சீக்ரெட்ஸ்…

அதாவது, தமிழக அரசின் முத்திரையில் கூட ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் தான் இருக்கிறது. தமிழ்நாட்டின் சிறப்பு கோயில்கள் தான் அதனால் தான் அரசர்கள் அந்த காலத்தில் கோவில்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். தமிழர்களின் அறிவை பறைசாற்றுவதற்கு கோயில்கள் சிறந்த உதாரணம். இது தெரியாமல் சூரி அறக்கட்டளை தான் முக்கியம் என்று எப்படி கூறலாம் என்று கேள்வி எழுப்பு உள்ளார்.

author avatar
Manikandan
Continue Reading

More in Cinema News

To Top