Categories: Cinema News latest news television

என்னங்கடா எல்லாரும் நல்லவங்களா ஆகிட்டீங்க.. கோபி நிலைமை தான் அந்தோ பரிதாபமா..?

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கேண்ட்டீனில் இருக்கும் பாக்கியாவிடம் கோதண்டம் புகைப்படத்தினை பழனிசாமியும், எழிலும் காட்டுகின்றனர். அப்போ இவர் தான் 2 லட்சத்துக்கு கேண்ட்டீனை கேட்டதாக கூறுகிறார். இவர் எதுவும் இங்க வாங்கவே இல்லை என்று அடித்து சொல்கிறார். 

அப்போ கோதண்டம் அங்கு வர செழியன் கடுப்பில் அவரை அடிக்க செல்கிறார். ஆனால் ராமமூர்த்தி தடுத்து விடுகிறார். அந்த நேரத்தில் அதிகாரிகள் வந்து ஆய்வு செய்ய கேண்டீனை திறக்கின்றனர். எல்லாரும் உள்ளே வர அதிகாரிகள் உணவுகளை ஆய்வு செய்கின்றனர். கடைசியில் அவர்கள் முடித்துவிட்டு வர செய்தியாளர்கள் மாற்றி கேள்வி கேட்கின்றனர். அவர்கள் இங்கு எந்த உணவு பொருளும் தப்பா இல்லை.

இதையும் படிங்க: தனது அப்பா கெட்டப்பில் ரஜினி நடித்த படம்!.. அப்பா மேல இவ்வளவு பாசமா?!..

எல்லாமே சரியாக இருப்பதாக சொல்லிவிடுகின்றனர். உடனே கோதண்டம் நான் சாப்பாடு வாங்கிருக்கேன். என் புகார் என்ன ஆச்சு என்கிறார். உடனே பாக்கியா உங்க பில்லை காட்டுங்க என்கிறார். அதை குப்பையில் தூக்கி போட்டேன். சரி உங்க பொருட்காட்சி பில்லை காட்டுங்க என்கிறார். அதுவும் இல்லை என்கிறார். சரி போன் நம்பரை கொடுங்க எனக் கேட்க அவர் திருட்டு முழி முழித்துவிடுகிறார்.

இதை பார்த்த அதிகாரிகள் கேண்ட்டீனில் எந்த பிரச்னையும் இல்லை. நீங்க தொடர்ந்து நடத்தலாம் எனக் கூறி அனுப்பி விடுகின்றனர். வீட்டில் இருக்கும் ஈஸ்வரியை பயமுறுத்திக்கொண்டு இருக்கிறார் கோபி. அந்த நேரத்தில் செழியன் வந்து கேண்ட்டீனில் எந்த பிரச்னையும் இல்லை என்பதை கூறுகிறார்.

இதையும் படிங்க: மகளுக்காக மீண்டும் ரெடியாகும் ரஜினி!.. குட்டிக்கதை ரெடியா சார்?!.. கேப்பு விடாம அடிச்சா எப்படி!..

Published by
Shamily