ஈஸ்வரியிடம் சரண்டரான பாக்கியா… சண்டை இழுத்துவிடும் கோபி… ஒரு ஆப்பை பார்சல் பண்ணுங்கப்பா…
Feb 15, 2024, 10:40 IST
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் செழியனிடம் பாக்கியா செய்தது தப்பு என்கிறார் கோபி. ஆனால் ராதிகா பிள்ளையை ஜெனிக்கிட்ட தான் கொடுக்கணும். அது சரி தான். ராஜி விஷயத்தில் அவங்க நடந்துக்கிட்டது தான் தப்பு என்கிறார் ராதிகா. அடுத்த நாள் பாக்கியா மற்றும் எழில் வீட்டுக்கு வருகின்றனர். தடுத்து நிறுத்தும் ஈஸ்வரி எங்கிருந்து வர எனக் கேட்க திருச்செந்தூர் என்கிறார். பாத்திங்களா இவ குன்னக்குடிக்கு போனது கோபிக்கு தெரியும். அவன் வந்து உண்மையை சொல்லி இருப்பானு தெரிஞ்சும். இவ நம்ம கிட்டையே பொய் சொல்றா என்கிறார். இதையும் படிங்க: லவ்வர்ஸ் டே அன்னைக்கும் லால் சலாமை சீண்டாத ரசிகர்கள்!.. மொய்தீன் பாய் மொத்த வசூல் இவ்வளவுதானா?.. ராமமூர்த்தி கூட ஏன்மா நமக்கு இந்த வேலை என்கிறார். நான் ராஜியை ஓடிவர சொல்லலை. புரியாம நின்னவங்களுக்கு ஹெல்ப் செஞ்சேன் என்கிறார். இருந்தும் ஈஸ்வரி, கோபி தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்க ஒரு கட்டத்தில் நான் செஞ்சது தப்பு தான். மன்னிச்சிடுங்க என பாக்கியா முடித்துவிடுகிறார். எழில் நீ ஏன்மா சாரி கேட்ட எனக் கூற நம்மளால உண்மையை சொல்ல முடியாது. அதுக்குனு பேசிக்கிட்டே இருக்க முடியாது. அதான் மன்னிப்பு கேட்டு முடிச்சிட்டேன் என்கிறார். அப்போ அங்கு வரும் இனியா பாக்கியாவை எப்பம்மா வந்த என மகிழ்ச்சியாக பேசிக்கொண்டு இருக்கிறார். அமிர்தா வீட்டில் கலவரம் நடந்து இருக்கு. நீ என்ன ஹாயா சொல்லுற எனக் கேட்கிறார். இதையும் படிங்க: பிக்பாஸ் பாக்குற நீங்கதான் முட்டாள்! அப்பா இறந்தப்போ கூட விடல – அனிதா அனுபவித்த வேதனை
இதை தொடர்ந்து, எழில் நீ லவ் செய்யலாம். ஆனா அந்த பையனை எங்களுக்கு பிடிக்கணும். நல்லவனா இருக்கணும் என கண்டிஷனை அடுக்கிக்கொண்டே செல்கிறார். வேணா இதெல்லாம். நான் நீங்க பாக்குற பையனையே கட்டிக்கிறேன் என இனியா கூறுவதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.
திட்டினாங்களா அம்மா எனக் கேட்க அந்த அக்கா மூஞ்சு டல்லாவே இருந்துச்சு. போனிலே இருந்தாங்க. பாத்தா இப்படி பண்ணிட்டாங்க. ஆனால் நீ சூப்பரு மா. செமையா வந்து ஹீரோ மாதிரி நின்ன எனக் கூறுகிறார். பாக்கியா ராஜி விஷயம் வேற. அம்மா எப்பையும் அப்படி பண்ணுவேனு நீ எதையும் பண்ணி வைக்காதே என்கிறார்.
