Categories: Cinema News latest news television

இதுக்கு தான் உங்களுக்கு வேலை ஆகாதுனு சொல்றது… ஜெனியால் கஷ்டப்பட போகும் தாத்தா…

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் எல்லாரும் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்கின்றனர். எல்லாரும் இனியாவை கலாய்த்து பேசிக் கொண்டுள்ளனர். எழில் ஸ்கிரிப்ட் குறித்தும் பேசி வருகிறார்கள். அமிர்தாவை தன்னுடைய ரெஸ்டாரெண்டுக்கு அழைத்து செல்கிறார் பாக்கியா.

ஜெனியை வீட்டை பார்த்து கொள்ள சொல்கிறார். துணைக்கு ஆளை வைத்துவிட்டு ஜெனியை வீட்டில் விட்டு செல்கின்றனர். எல்லாரும் அவரவர் வேலைக்கு கிளம்பிவிடுகின்றனர். ரெஸ்டாரெண்டில் அமிர்தா இருக்க அப்போ அங்கு வருகிறார் பழனிசாமி. செல்வி பக்கத்தில் பார் திறக்கும் விஷயத்தினை பழனிசாமியிடம் கூறுகிறார்.

இதையும் படிங்க: ஓவர் சத்தமா இருக்கே… எல்லா பிரச்னையும் எதுக்கு முத்து, மீனாக்கே வருது… கதைய மாத்துங்கப்பா!..

பாக்கியாவும் நானும் பேசி பார்த்தேன். ஆனால் அவர் எனக்கு ரெஸ்டாரெண்ட்டை கொடுங்க எனக் கேட்டதாக கூறுகிறார். பழனிசாமியும் அதெல்லாம் எப்படி ஓகே சொல்லுவாரு? அவருடன் பேசி பழகிக்க வேண்டியது தானே எனக் கூறி பாக்கியாவை அழைத்து செல்கிறார். பார் ஓனரிடம் பேச செல்கின்றனர். பழனிசாமி பார் ஓனரிடம் தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார். திறப்பு விழாவுக்கு சமையல் ஆர்டர் கொடுத்தவர் சொதப்பி விட்டதாக கூற பழனிசாமி பாக்கியாவிற்கு அந்த ஆர்டரை வாங்கி கொடுக்கிறார்.

அவர் செய்த சமையல் ஆர்டர்களை சொல்லி அசர வைக்கிறார். அந்த ஆர்டருக்கான முன்பணத்தினையும் கொடுக்கிறார். ஜெனி வீட்டில் அழும் குழந்தையை தட்டி கொடுத்து கொண்டு இருக்கிறார். ராமமூர்த்தி அதை கேட்டு நான் வரவா எனக் கேட்க இல்லை நான் பார்த்து கொள்கிறேன். வந்து சாப்பாடு கொடுப்பதாக சொல்கிறார்.  பின்னர் குழந்தையை தூங்க வைத்துவிட்டு ஜெனி தூங்கிவிட உதவிக்கு வந்த பெண்ணும் தூங்கிவிடுகிறார். 

இதையும் படிங்க: தல டக்கர்டோய்!.. இது விடாமுயற்சி கெட்டப்பா? இல்லை குட் பேட் அக்லியா?.. அஜித் இவ்ளோ அழகா இருக்காரே!..

பார் ஓனர் வந்து ஆர்டருக்கு தேவையான டிஸ்களை சொல்கிறார்.  150 பேருக்கு சமைக்கணும் எனக் கூறிவிட்டு செல்கிறார். செல்வி இந்த அக்காக்கு எதுக்கு தேவையில்லாத வேலை எனக்கூற அமிர்தா அவங்க யோசிக்காம இதை செய்ய மாட்டாங்க என்கிறார். பார் ஓனர் ஆர்டர் கொடுத்துவிட்டு செல்ல பழனிசாமியிடம் பாரில் இருந்து வருபவர்கள் பிரச்னை செய்வார்களே எனக் கூறிகின்றார்.

அப்படிலாம் யோசிக்காதீங்க. எல்லாரும் அப்படி பிரச்னை செய்ய மாட்டாங்க. பிசினஸ் தொடங்கிட்டா பிரச்னையை சமாளிச்சு தான் ஆகணும். நீங்க கூட இருக்கீங்களா என பாக்கியா கேட்க பழனிசாமியும் சரியென கூறுவதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily