பாலாவின் அவன் இவன் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவு!

தமிழ் சினிமாவில்  யதார்த்த மற்றும் விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கையைத் வித்யாசமான  பாணியில் திரையில் கொண்டு வருபவர்  இயக்குனர் பாலா.  அவரது முதல்
 
avan ivan movie

தமிழ் சினிமாவில்  யதார்த்த மற்றும் விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கையைத் வித்யாசமான  பாணியில் திரையில் கொண்டு வருபவர்  இயக்குனர் பாலா.  அவரது முதல் படமான சேதுவிலேயே அதனை நிறுபித்தவர் இவர். இவரது இயக்கத்தில் வெளியான பெரும்பாலான படங்கள் குறிப்பாக  நந்தா, பிதாமகன், பரதேசி,  நான் கடவுள் உள்ளிட்ட படங்கள்  அந்த வகையிலேயே இருக்கும். 

பாலா இயக்கத்தில் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்து வெளியான படம் அவன் இவன். கடந்த 2011ம் ஆண்டு வெளியான இப்பத்தில்  கிராமத்து வெள்ளந்தித் தனம், அடித்தட்டு மக்களின் வாழ்வியல், மற்றும் பாலாவின் வழக்கமான வன்முறையும் பாசமும் கலந்த ஒரு படைப்பாக இப்படம்  வெளிவந்தது.சேது ,  நந்தா ,  பிதாமகன் ,  நான் கடவுள்  என மிகவும் கனமான, பார்ப்பவர்களை உலுக்கி எடுக்கும் ராவான கதைகளையே தந்து வந்த பாலா, முதன்முறையாகத் தனது பாணியில் இருந்து சற்று விலகி, நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கிய படம் தான் அவன் இவன் .

vishal

ஒரே தந்தைக்கு, வெவ்வேறு தாய்கள் மூலம் பிறந்து, எப்போதும் ஒருவரையொருவர் அடித்துக் கொள்ளும் ஆர்யா மற்றும்  விஷால் ஆகிய இரு திருடர்களின் கதையே இது. இவர்களுடன், அந்த ஊரின் ஜமீன்தாராக வரும்  ஜி.எம். குமார் கதாபாத்திரத்தைச் சுற்றி நகரும் கதைக் களம், ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்ததோடு, க்ளைமாக்ஸில் கண்கலங்கவும் வைத்தது.

விஷால் திரைப்பயணத்தில்  அவன் இவன்  ஒரு மிகமுக்கியமான மைல்கல். தமிழ் சினிமாவில் எந்த ஒரு மாஸ் ஹீரோவும் செய்யத் துணியாத ஒரு சவாலான கதாபாத்திரத்தை விஷால் ஏற்றார். படம் முழுக்க கண் குறைபாடு உடையவராக, பெண் வேடமிட்டு நடனமாடும் கலைஞராக விஷால் காட்டிய அர்ப்பணிப்பு அசாத்தியமானது. இந்த படத்தில் நடித்த பாதிப்பு பின்னாளில் அவருக்கு கடுமையான தலைவலிக்கு கொண்டு சென்றது. இதனை அவரே ஒரு பேட்டியில் கூறியிருப்பார்.
படத்திற்கு மற்றொரு தூணாக அமைந்தது யுவன் சங்கர் ராஜாவின் இசை. 

vishal

வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற  அவன் இவன் படம் வெளியாகி 15 ஆண்டுகள் கடந்திருந்தாலும், இன்று வரை தொலைக்காட்சிகளிலும், சமூக வலைத்தள மீம்களிலும் கொண்டாடிகொண்டுதான் இருக்கிறார்கள்.

From Around the web