மாஸ்டரும் இல்ல.. டூப்பும் இல்ல.. ‘பிதாமகன்’ படத்தில் அந்த சண்டைக் காட்சி உருவான விதம்

by Rohini |
vikram
X

பாலாவின் வணங்கான்: பாலாவின் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் ரிலீசான திரைப்படம் வணங்கான். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இருந்த வணங்கான் திரைப்படம் வெளியாகி ரசிகர்களை திருப்திப்படுத்தி வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஆரம்பத்தில் சூர்யா நடிப்பதாக இருந்து அதன் பிறகு சில பல கருத்து வேறுபாடுகள் ஏற்பட அருண் விஜய் இந்த படத்திற்குள் நுழைந்தார்.

அருண்விஜய்க்கு டர்னிங் பாயிண்ட்: பாலாவை பொறுத்த வரைக்கும் எந்த ஒரு நடிகர் இவருடைய படங்களுக்குள் வந்தாலும் அடுத்து அவருடைய கெரியரே வேற எங்கேயோ போய்விடும். அப்படித்தான் சூர்யா விக்ரம் ஆர்யா என பல நடிகர்களை குறிப்பிடலாம். அந்த வரிசையில் இப்போது அருண் விஜயும் இணைந்து இருக்கிறார். அருண் விஜய்க்கு வணங்கான் திரைப்படம் ஒரு டர்னிங் பாயிண்டாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

பிதாமகன் பேசும் மொழி: படத்தின் கதை வெற்றி அடைகிறதோ இல்லையோ ஒரு நடிகனின் நடிப்பு பாலாவின் இயக்கத்தில் நிச்சயமாக வெற்றியடையும். அந்த அளவுக்கு நடிக்க தெரியாத நடிகரை கூட பாலா நடிக்க வைத்து விடுவார். அதில் அருண் விஜயும் விதிவிலக்கல்ல. இந்த நிலையில் பாலா ஒரு பேட்டியில் பிதாமகன் படம் குறித்து முதன்முறையாக ஒரு தகவலை பகிர்ந்திருக்கிறார். அந்தப் படத்தில் ஒரு வித்தியாசமான கேரக்டரில் வெட்டியானாக விக்ரம் நடிக்க அவர் பேசும் அந்த மொழி யாருக்குமே புரியாது.

அப்படியே படம் முழுக்க தன்னுடைய நடிப்பால் மட்டுமே ஜெயித்திருப்பார் விக்ரம். இந்த நிலையில் பிதாமகன் திரைப்படத்தின் ஆரம்பத்தில் விக்ரமின் அறிமுகம் இருக்கும். அப்போது ஒரு டீக்கடையில் டீ குடிக்க வருவார் விக்ரம். அந்த நேரத்தில் ஒரு சண்டை காட்சி அமைந்திருக்கும். அந்த காட்சியை எடுப்பதற்கு படத்தின் சண்டை பயிற்சியாளர் எப்படி காட்சி அமைக்க வேண்டும்? எங்கு கேமரா வைக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லி ஆலோசனை செய்து கொண்டிருந்தாராம்.

உடனே பாலா உள்ளே புகுந்து நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம். கேமராவை மூணு இடத்தில் வையுங்கள். நாலு ஃபைட்டர்களை அழைத்து ஹீரோன்னு நினைச்சு சண்டை போடாதீங்க. உங்களுக்குள்ள யாரு ஜெயிக்கிறாங்கன்னு பார்ப்போம், நீங்க அவரை அடிங்க. அவர் உங்கள அடிப்பாரு. அவர் அடிக்கிறதை விட நீங்க பயங்கரமா அடிங்க. நீங்க அடிக்கிறதை விட விக்ரம் பயங்கரமா அடிப்பாரு.


இப்படிதான் இந்த சண்டை காட்சி இருக்க வேண்டும் என்று கூறிவிட்டு போய்விட்டாராம் பாலா. இந்த மாதிரிதான் அந்த சீன் எடுக்கப்பட்டது. அது உண்மையாகவே அனைவருமே மாறி மாறி சண்டை போட்டு எடுக்கப்பட்ட காட்சி என பாலா கூறியிருக்கிறார்.

Next Story