தனுஷுடன் எப்போ சேர போறீங்க? பாலா கொடுத்த தரமான ரிப்ளே

by Rohini |
bala
X

சிறந்த நடிகர்: தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது இட்லி கடை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அது மட்டுமல்ல ஒரு இயக்குனராகவும் தன்னுடைய முத்திரையை பதித்து வருகிறார். இவருடைய இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் ராயன். அந்த படத்தில் தனுஷும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

லைன் அப்: படம் ஓரளவு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தையும் இயக்கி இருக்கிறார். இந்தப் படமும் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கின்றது. இதனை அடுத்து குபேரா என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். அது ஜூலை மாதம் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக ஹிந்தி படத்திலும் நடித்து வருகிறார் தனுஷ்.

ஹிந்தி படம்: ஏ ஆர் ரகுமான் இசையில் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தயாராகும் தேரே இஷ்க் மெயின் என்ற அந்த ஹிந்தி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக கீர்த்தி சனோன் நடித்திருக்கிறார். இப்படி சினிமாவில் தொடர்ந்து கைவசம் ஏகப்பட்ட படங்களை வைத்து ஒரு பிசியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் தனுஷ். அவருடைய கரியரில் அதிகளவு பேசப்பட்ட திரைப்படமாக அமைந்தது அசுரன், கர்ணன் போன்ற திரைப்படங்கள்.

பெரும்தாக்கத்தை ஏற்படுத்திய படங்கள்: அந்தப் படத்தில் புதிய பரிமாணத்தில் நடித்திருந்தார் தனுஷ். அதுவரை ஒரு விளையாட்டுத்தனமான குறும்புத்தனமான கதாபாத்திரங்களிலேயே நடித்து இளைஞர்களை மட்டுமே கவர்ந்து வந்த தனுஷ் இந்த இரு திரைப்படங்களுக்கு பிறகு ஒட்டுமொத்த ஆடியன்ஸையும் தன் பக்கம் இழுத்தார். ஒரு அசுரத்தனமான நடிப்பு அவரிடம் இருந்ததை அசுரன் கர்ணன் போன்ற திரைப்படங்களுக்கு பிறகு தான் மக்கள் அறிய ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் தனுஷை பற்றி ஒரு மேடையில் பாலா பேசியது இப்போது வைரலாகி வருகின்றது. ஒரு விருது வழங்கும் மேடையில் தனுஷுக்கு பாலா விருது கொடுக்க அப்போது பாலா தனுஷை பார்த்து ‘இவரை ஆரம்பத்தில் இருந்து நான் கவனித்து வருகிறேன். இவருக்குள் ஒரு அசுரத்தனமான நடிப்பு ஒளிந்து இருக்கிறது. ஒவ்வொரு படங்களிலுமே அதை வெளிப்படுத்தி வருகிறார். ஒரு சில படங்களில் பார்க்கும் பொழுது தமிழ் சினிமாவிற்கு கிடைத்த வரம், இல்லை இல்லை இந்திய சினிமாவிற்கே கிடைத்த வரம் தனுஷ்’ என கூறி இருக்கிறார் பாலா. உடனே இப்படி சினிமாவிற்கு கிடைத்த வரமான தனுசுடன் எப்போது இணையப் போகிறீர்கள் என பாலாவிடம் கேட்டபோது அதற்கு ‘அவர் வாய்ப்பு கொடுக்கணுமே’ என தனக்கே உரிய பாணியில் சொல்லி தன்னுடைய பெருந்தன்மையான பதிலுடன் மேடையை கலகலப்பாக்கினார் பாலா.

Next Story