நந்தா பட கிளைமேக்ஸ்!.. அது மம்முட்டி படத்திலிருந்து சுட்டது!.. அட பாலாவே சொல்லிட்டாரே!...

by Murugan |   ( Updated:2024-12-29 08:30:10  )
nandha
X

nandha

இயக்குனர் பாலா:

தமிழ் சினிமாவில் இயக்குனர்களுக்கெல்லாம் இயக்குனர் என்ற ஆணித்தரமாக சொல்லலாம் இயக்குனர் பாலாவை. இவர் பாலு மகேந்திரா பட்டறையில் இருந்து வந்தவர். நடுத்தர மக்களை மிகவும் பின் தங்கிய ஒடுக்கப்பட்ட மக்களை முன்னிலைப்படுத்தும் விதமாக இவருடைய படங்களில் இருக்கும் கதாபாத்திரங்கள் பெரிதளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. குறைவான படங்களை இவர் எடுத்து இருந்தாலும் ஒவ்வொரு படங்களும் காலத்திற்கும் நின்னு பேசுபவையாக நிச்சயமாக இருக்கும்.

இவர் சமீபத்தில் தனியார் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் தன் வாழ்க்கையில் நடந்தவற்றை மிகவும் வெளிப்படையாக பேசியிருக்கிறார் பாலா. சினிமாவிற்கு வருவதற்கு முன் என்னெல்லாம் கெட்ட பழக்கங்கள் இருந்தது. அது எல்லாவற்றிற்கும் அடிமையாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் அதனால் இவர் மிகவும் பாதிக்கப்பட்டு இன்னும் ஒரு வருடம் தான் உயிரோடு இருப்பார் என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

எதுவும் தெரியாமல் வந்தேன்:

அதனால் இந்த ஒரு வருடத்தில் அவன் என்ன செய்ய வேண்டும் செய்யவேண்டும் என ஆசைப்படுகிறானோ அதை செய்யட்டும் என பாலாவின் குடும்பத்தார் உடன்பிறந்தவர்கள் எல்லாரும் இவர் போக்கில் விட்டு விட்டார்களாம். அதன் பிறகு பாலா தனக்கு எந்த வேலையும் தெரியாது. படிக்கவும் இல்லை. அதனால் ஓப்பன் ஃபீல்டாக இருந்தது சினிமா மட்டும் தான் .அப்படித்தான் சினிமாவிற்குள் வந்தேன்.

எல்லா பழக்கங்களுக்கும் அடிமையாகி ஓவர் டோஸ் ஆகி ஒரு கட்டத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கண்விழித்து பார்த்தால் நான் ஏழு நாட்களாக தூக்கத்திலேயே இருந்திருக்கிறேன் என்பதை தெரிந்து கொண்டு அதன் பிறகு தான் இந்த பழக்கங்களை எல்லாம் விட்டு தொலைத்தேன் என பாலா கூறியிருக்கிறார். பிறகு பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து படிப்படியாக படங்களை இயக்கி இன்று இங்கு வந்து உட்கார்ந்திருக்கிறேன் என கூறினார் பாலா.

கருணை இல்லாத கதாபாத்திரம்:

thaniyavardhanam movie

இந்த நிலையில் உங்களுடைய பெரும்பாலான படங்களில் ஒரு கதாபாத்திரத்தை எடுத்துக் கொண்டால் கொஞ்சம் கருணையுடன் கடந்து இருக்கலாமே என்ற வகையில் ஏதாவது ஒரு கதாபாத்திரம் நம்மை நினைக்க வைக்கும். உதாரணமாக நந்தா படத்தில் சூர்யா எவ்வளவு கெஞ்சியும் மன்னிப்பு கேட்டும் அவருடைய தாய் கடைசி வரை மன்னிக்க மாட்டார். ஒருவேளை மன்னித்து விட்டிருக்கலாமே என நந்தா படத்தில் இருந்து இந்த கேள்வி பாலாவிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பாலா இதைப் பற்றி ஒரு உண்மையை நான் சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு முன்பு மம்மூட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் தனியாவர்தனம். இந்தப் படத்தில் மம்முட்டியை மீண்டும் பைத்தியக்காரன் என பட்டம் கட்டி விடுவார்கள். அதனால் அவருடைய தாய் தன் மகன் திரும்பத் திரும்ப கஷ்டப்படக்கூடாது என்பதற்காக சாப்பாட்டில் விஷம் வைத்து கொன்று விடுவார். இந்த ஒரு நிகழ்வு என்னை பெரிதும் பாதித்தது. இந்த கருவை எடுத்துக் கொண்டுதான் நந்தா படத்தை பின்னோக்கி எடுத்தேன் என பாலா கூறியிருக்கிறார்.

Next Story