×

நம்ம டைரக்டர் பாலாவுக்கா இந்த நிலைமை... அதிர்ச்சியில் கோலிவுட் 

இயக்குனர் பாலாவால் வளர்ந்த நடிகர்களே அவரது படத்தில் நடிக்கத் தயங்குகிறார்களாம். 
 
நம்ம டைரக்டர் பாலாவுக்கா இந்த நிலைமை... அதிர்ச்சியில் கோலிவுட்

சேது, பிதாமகன், நான் கடவுள் உள்ளிட்ட படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் பாலா. வித்தியாசமான கதைக் களங்கள் மூலம் தேசிய அளவில் முத்திரை பதித்த பாலா, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர். 

ஆனால், விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து அர்ஜூன் ரெட்டி படத்தை இவர் வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்தார். ஆனால், அந்தப் படம் விக்ரம் உள்பட தயாரிப்பு தரப்புக்குத் திருப்தி அளிக்காததால், வேறு ஒரு இயக்குனரை வைத்து ஆதித்யா வர்மா என்ற  பெயரில் அந்தப் படத்தை புதிதாக எடுத்தனர். 


பாலா இயக்கிய வர்மா படம் ஓடிடியில் வெளியானது. அதைப் பார்த்த ரசிகர்கள், `இயக்குனர் பாலாவுக்கு என்ன ஆச்சு?’ என்று கேள்வி கேட்கத் தொடங்கினார்கள். அடுத்ததாக பட வாய்ப்புகள் எதுவுமின்றி ஒதுங்கியே இருந்த பாலா, முன்னணி நடிகர்களை வைத்து ஒரு படம் இயக்கும் முயற்சியில் இறங்கினார். அவரால் வளர்த்துவிடப்பட்ட நடிகர்களே அவரது இயக்கத்தில் நடிக்கத் தயங்கியிருக்கிறார்கள். 


இதனால் அதிருப்தியடைந்த இயக்குனர் பாலா ஓடிடி தளத்துக்காக ஒரு படம் இயக்க முடிவு செய்திருக்கிறார். புது முகங்களை வைத்து பாலா இயக்கும் படம் நெட்பிளிக்ஸில் வெளியாகும் என்று தெரிகிறது. இதற்கான பேச்சுவார்த்தை இறுதிக்  கட்டத்தில் இருக்கிறதாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

From around the web

Trending Videos

Tamilnadu News