Connect with us
Mani Ratnam and Balachander

Cinema News

மணிரத்னத்தை கால் கடுக்க காக்க வைத்த பாலச்சந்தர்!… ஆனா அதுக்கப்புறம் நடந்ததுதான் சம்பவமே!

மணிரத்னம் இந்திய சினிமாவின் மிக முக்கியமான இயக்குனராக திகழ்ந்து வருகிறார். இவர் இயக்கிய “ரோஜா” திரைப்படம் இவரை ஒரு இந்திய இயக்குனர் என்ற அந்தஸ்துக்கு கொண்டு சென்றது. இத்திரைப்படத்தின் மூலம்தான் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மாம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இத்திரைப்படம் உருவாவதற்கு பின்னணியில் ஒரு சுவாரஸ்ய தகவல் ஒன்று கூறப்படுகிறது. அது குறித்து இப்போது பார்க்கலாம்.

கே.பாலச்சந்தரின் கவிதாலயா புரொடக்சன்ஸின் இணை தயாரிப்பாளரான பிரமிட் நடராஜன், “மணிரத்னம் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தை தயாரிக்கலாமா?” என கேட்டாராம். அதற்கு பாலச்சந்தர், “இல்லை. அவர் நமது கம்பெனிக்கு படம் பண்ணமாட்டார் என்றுதான் நினைக்கிறேன்” என கூற, அதற்கு பிரமிட் நடராஜன் “ஏன்?” என கேட்டிருக்கிறார்.

“மணிரத்னம் இயக்குனரான புதிதில் பல முறை வாய்ப்புக்காக நமது கம்பெனி வாசலில் வந்து நின்றிருக்கிறார். ஆனால் நான் அவரை அந்த சமயத்தில் கண்டுகொள்ளவில்லை. ஆதலால் அது அவரது மனதில் பதிந்திருக்கும். நானே சென்று கேட்டு அவர் முடியாது என்று சொல்லிவிட்டால் அது அவமானமாக போய்விடும்” என்று கூறினாராம். ஆனால் பிரமிட் நடராஜனோ, “நான் அவரிடம் சென்று பேசுகிறேன்” என கூறிவிட்டு மணிரத்னத்திடம் சென்றிருக்கிறார்.

அங்கே மணிரத்னத்தை சந்தித்து, “நீங்கள் பாலச்சந்தர் கம்பெனிக்கு ஒரு படம் பண்ணித்தர முடியுமா?” என கேட்ட மறு நொடியில் மணிரத்னம், “நிச்சயமாக படம் பண்ணுகிறேன். நான் அவரை எப்போது வந்து பார்க்க வேண்டும்?” என கேட்டாராம். இதனை தொடர்ந்துதான் “ரோஜா” திரைப்படம் உருவாகியிருக்கிறது.

இதையும் படிங்க: உன் வாய்ஸ் ஆம்பள மாதிரி இருக்கு!. நடிகையை நிராகரித்த இயக்குனர்கள் – வாய்ப்பு கொடுத்த பாலச்சந்தர்…!

author avatar
Arun Prasad
Continue Reading

More in Cinema News

To Top