×

ரஜினியை செருப்பால் அடிப்பேன் என சொன்ன பாலச்சந்தர் – ஏன் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவரது குருவான பாலச்சந்தர் குடித்துவிட்டு வந்தால் செருப்பால் அடிப்பேன் என சொன்னதாக ரஜினி பேசி இருக்கும் வீடியோ இப்போது வைரல் ஆகி வருகிறது.

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவரது குருவான பாலச்சந்தர் குடித்துவிட்டு வந்தால் செருப்பால் அடிப்பேன் என சொன்னதாக ரஜினி பேசி இருக்கும் வீடியோ இப்போது வைரல் ஆகி வருகிறது.

கொரோனா ஊரடங்கால் இப்போது பலரும் வீடுகளில் முடங்கியுள்ளதால் பொழுதுபோக்குக்காக இணையத்தை துழாவி வருகின்றன. அதில் சினிமா நடிகர்கள் பற்றிய பல பழைய வீடியோக்கள் பார்க்கப்பட்டு இப்போது வைரலாகி வருகின்றன. இந்நிலையில் அதுபோல ரஜினி பேசிய வீடியோ சமூகவலைதளத்தில் இப்போது பரவி வருகிறது.

அந்த வீடியோவில் ரஜினி’ ஒருநாள் எனக்கு பாலச்சந்தரிடம் இருந்து ஒரு போன்கால் வந்தது. அப்போது எடுக்க வேண்டிய ஒரு காட்சிக்காக என்னை உடனே அழைத்தார். ஆனால் அப்போது நான் குடித்து இருந்ததால் வாசனையை மறைக்க ஸ்ப்ரே அடித்துச் சென்றேன். ஆனாலும் கண்டுபிடித்த அவர், இனிமேல் குடித்துவிட்டு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தால் உன்னை செருப்பால் அடிப்பேன் என்று சொன்னார். அன்று விட்டது தான் இந்த குடி பழக்கம்.’ எனப் பேசியுள்ளார்.

ரஜினியை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் பாலச்சந்தர். ரஜினி அவரை தன் குருவாக கருதி வந்தார். இருவருக்கும் இடையே இருந்த பாசப்பிணைப்பை இந்த வீடியோவில் ரஜினி பேச்சு வெளிப்படுத்தியது.

From around the web

Trending Videos

Tamilnadu News