×

ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்படும் பாலாஜி? தகவலை கசியவிட்ட பிரபலம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வாரம் தோறும் ஒரு போட்டியாளர் வெளியேறுவது வாடிக்கையாக உள்ளது. 30 நாட்களை கடந்துள்ள பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இதுவரை மூன்று எவிக்ஷன்களை சந்தித்துள்ளது.

 

பிக்பாஸ் வீட்டில் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு இடையே பல்வேறு பிரச்சனைகள் உள்ளது. இதனால் இந்த வாரம் யார் வெளியேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இந்த நிலையில் இந்த வாரம் நடைபெற்ற நீதிமன்ற டாஸ்கில் சனம் ஷெட்டி பாலா மீது புகார் ஒன்றை கொடுத்து இருந்தார். அதில் பாலாஜி அவரை அட்ஜஸ்ட் பண்ணி தான் அழகி பட்டத்தை பெற்றார் என்று கூறியதாக சனம்ஷெட்டி குறிப்பிட்டிருந்தார்.

இதனால் பாலாஜிக்கு சமூகவலைதளங்களில் பெரும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. எனவே, போன சீசனில் சரவணனுக்கு பண்ணியது போலவே பாலாஜி முருகதாசுக்கும் ரெட் கார்டு கொடுக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

மேலும் பிக் பாஸ் வீட்டில் இருந்து பாலாஜிக்கு ரெட் கார்டு கொடுத்து அனுப்பப்பட உள்ளதாக நடிகை வனிதா விஜயகுமார்  கூறியிருக்கும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் தான் பகல் நிலவு சீரியல் நடிகரான அசீமை பிக்பாஸ் குழுவினர் களமிறக்க போவதாகவும்  கூறப்படுகிறது.

இவ்வாறு பாலாஜி முருகதாஸ் இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படும் தகவல்கள், பாலாஜி ரசிகர்களை பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News