என்ன மன்னிச்சுடுங்க!... இப்படி இறங்கி வந்துட்டாரே பாலாஜி.. பிக்பாஸ் வீடியோ...

தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தொடக்கம் முதலே அராத்தாக நடந்து வந்தவர் பாலாஜி முருகதாஸ். அதனால், சில பேரை தவிர மற்ற பிக்பாஸ் போட்டியாளர்கள் யாருக்கும் அவரை பிடிக்கவில்லை.
குறிப்பாக ஆரி, ரியோ என பலரிடமும் தொடர்ந்து சண்டை போட்டு வந்தார். எனவே, அவரை தொடர்ந்து எவிக்ஷன் போது நாமினேட் செய்து வந்தனர். சமீபத்தில் அவரிடம் மாற்றம் ஏற்பட்டது. தன்னை மாற்றிக்கொண்டு விளையாட துவங்கினார்.
இந்நிலையில், ஆரி மற்றும் ரியோவிடம் பாலாஜி ‘நான் நடந்து கொண்டது தவறு.என்னை மன்னித்து விடுங்கள்’ என மன்னிப்பு கேட்கும் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது.
இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘இப்படி நடிக்கிறியேடா?’ என கிண்டலடித்து வருகின்றனர்.
#Day75 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/e8HgP2lS6a
— Vijay Television (@vijaytelevision) December 18, 2020