×

குடித்துவிட்டு என் தந்தை அடிப்பார்!...சோகக்கதை சொன்ன பாலாஜி பீரில் குளிக்கும் வீடியோ

 

விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக்பாஸ் சீசன் 4 நடைபெற்று வருகிறது. இதில் பங்குபெற்றுள்ள போட்டியாளர்களில் பாலாஜி முருகதாசும் ஒருவர். இவர் பிரபல மாடல் ஆவார். மேலும், மிஸ்டர் இந்தியா பட்டத்தையும் பெற்றுள்ளார்.

தான் கடந்து வந்த பாதையை கூறியபோது ‘என் தாய், தந்தை இருவருமே குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள். என் தந்தை குடித்துவிட்டு நள்ளிரவில் என்னை அடித்து சித்ரவதை செய்வார். குழந்தையை சரியாக வளர்க்க முடியாதவர்கள் ஏன் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்’ என சோகமாக பேசியிருந்தார்.அவரின் பேச்சைக்கேட்டு பிக்பாஸ் இதர போட்டியாளர்கள் மட்டுமில்லாமல், பார்வையாளர்களுக்கும் கண்ணீரை வரவழைத்தது.

இந்நிலையில், நீச்சல் குளத்தில் பாலாஜி பீரில் குளிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து பாலாஜியை கிண்டலடித்து வருகின்றனர்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News