×

போதையில் கார் விபத்து... காப்பாற்றிய யாஷிகா... அடுத்த சர்ச்சையில் பாலாஜி.. 

 

விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக்பாஸ் சீசன் 4 நடைபெற்று வருகிறது. இதில் பங்குபெற்றுள்ள போட்டியாளர்களில் பாலாஜி முருகதாசும் ஒருவர். பாடி பில்டர் மற்றும் பிரபல மாடல் ஆவார். மேலும், மிஸ்டர் இந்தியா பட்டத்தையும் பெற்றுள்ளார்.

இவர் தொடர்பான சர்ச்சையான செய்தி தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. தனது பெற்றோர் குடிநோயாளிகள்.. என் தந்தை என்னை குடித்துவிட்டு நள்ளிரவில் அடிப்பார் என்றெல்லாம் சோக கீதம் வாசித்த பாலாஜி, நீச்சல் குளத்தில் பீரில் குளிக்கும் வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலாகியது.

தற்போது அவரை பற்றிய மற்றொரு சர்ச்சையான செய்தி வெளியாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு நடிகை யாஷிகா ஆனந்த்  அவரின் ஆண் நண்பர்களுடன் காரில் சென்ற போது ஒரு நபர் மீது மோதி விபத்து ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது. அதன் அந்த செய்தி ஊற்றி மூடப்பட்டது.

இந்நிலையில், பாலாஜி முருகதாசும், யாஷிகா ஆனந்தும் நண்பர்கள் என்பதும், அன்று மதுபோதையில் காரை ஓட்டியதே பாலாஜி முருகதாஸ் என்பதும் தெரியவந்துள்ளது. ஒரு மீன் விற்கும் நபர் மீது பாலாஜி காரில் மோதியுள்ளார். அதன்பின் தனது தோழியான நடிகை யாஷிகா ஆனந்தை உதவிக்கு அழைத்துள்ளார். அந்த இடத்திற்கு உடனே சென்ற யாஷிகா பிரச்சனையை சுமூகமாக முடித்து பாலாஜி முருகதாஸை காப்பாற்றியதாக செய்திகள் கசிந்துள்ளது. இந்த தகவலை ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நடத்தி வரும் ஜோ மைக்கேல் தெரிவித்துள்ளார். மேலும், அவரது நிறுவனத்தை டுபாக்கூர் என பாலாஜி கூறியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையேல் அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News