×

பிக்பாஸ் குரல் இவர்தான்... அழகாக போட்டு கொடுத்த பாலாஜி முருகதாஸ்... சந்தேகம் உண்மை தானாம்...

பாலாஜி முருகதாஸ் பிக்பாஸ் குரலுக்கு சொந்தக்காரரை அழகாக ரசிகர்களிடம் கோர்த்துவிட்டு இருக்கிறார்.
 

தமிழ் பிக்பாஸ் சீசனில் பெரிய கண்டெண்ட்டுகளை பெண் போட்டியாளர்கள் தான் அதிகம் கொடுப்பார்கள். இந்த வருட தமிழ் சீசனில் பாலாஜி முருகதாஸ் தான் அதிக சண்டைகளுக்கு காரணமாகினார். சனமிடம் தொடங்கி வீட்டில் இருக்கும் அனைவரிடமும் வம்புக்கு நின்றார். அதிலும், ஆரி சண்டையில் எக்கசக்கமாக எகிறினார். எங்கே அடிதடியாகி விடுமோ என யோசிக்கும் பொழுதே, அவர் காலில் விழுந்து ஜெர்க்காக செய்தார். 

கடந்த சீசன் வின்னர்களை கடலை சாப்பிட்டவர்கள் என சொல்லி ஒரு பக்கம் சர்ச்சையில் சிக்கினார். அது மட்டுமல்லாமல், சனமிடம் அட்ஜஸ்மெண்ட் என்ற வார்த்தையை கூறி பெரிய பிரச்சனையில் மாட்ட இருந்தவரை எப்படியோ விஜய் தொலைக்காட்சி காத்து பைனல்ஸ் வரை கொண்டு வந்தது. ஆரியுடன் அவர் கடைசியாக மேடை ஏறிய போதே, கப்பு ஆரிக்கு தான் என பலரும் சத்தியம் செய்தனர்.

இந்நிலையில், வெளியில் வந்த பாலாஜிக்கு சண்டை செய்யாமல் கடுப்பில் இருக்கிறாராம். சில நாட்களாக பிக்பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் இவர் தான் என பாலிவுட் நடிகர் சச்சிதானந்தம் என்கிற சாஷோ கிசுகிசுக்கப்பட்டு வந்தார். இவர் பேசும்  வீடியோ ஒன்று வெளியாகி செம வைரலானது. தமிழ் பிக்பாஸின் குரலை போலவே இருக்கும் சாஷோ தற்போது மற்றொரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதுவும் பிக்பாஸ் குரலுக்கு அச்சாகவே இருக்கும் நிலையில், பாலாஜி முருகதாஸ் அந்த வீடியோவில் என்ன அண்ணா எப்டி இருக்கீங்க எனக் கமெண்ட் போட்டு தேங்காயை உடைத்து விட்டார். இதனால் சந்தேகம் உண்மை தான் எனப் பேச்சுகள் அடிப்பட தொடங்கி இருக்கிறது. சிலர் மற்ற போட்டியாளர்களை டேக் செய்து உண்மையை கேட்கத் தொடங்கி இருக்கின்றனர்.
 

From around the web

Trending Videos

Tamilnadu News