×

ஆங்கரை தவறாக பேசிய பாலாஜி... விருதை திரும்ப பெற்ற சேனல்!!!

விருதை திரும்ப பெற்ற பாலாஜி, ஆங்கரை தவறாக பேசியதாக பிரபல சேனல் குற்றச்சாட்டு.
 
Balaji-Murugadoss-Wiki-1024x682

பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட தன் மூலம் பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். அந்த நிகழ்ச்சியில் ஷிவானியுடன் நெருக்கமாக பழகியதால் காதல் கிசுகிசுக்கப்பட்டவர் பாலாஜி. 

இவர் ஆரம்பத்தில் ஆண் அழகனாக இருந்துள்ளார். மாடலிங் செய்து கொஞ்சம் கொஞ்சமாக இந்த இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இந்நிலையில் பிக்பாஸ் மூலம் பிரபலமான பாலாஜிக்கு பிரபல யூடியூப் சேனல்‘Biggest Sensation On Reality Television’ என்ற விருதை கொடுத்தது. ஆனால், தற்போது அந்த விருதினை திருப்பி அளித்துள்ளார் பாலாஜி. 

காரணம் அந்த மேடையில் அவர் பேசிய வீடியோவை இதுவரையிலும் சம்பந்தட்ட சேனல் ஒளிபரப்பவில்லையாம். அதற்கு சேனல் தரப்பு கூறும் காரணம் என்னவெனில், விருது வாங்கிவிட்டு பேசிய பாலாஜி மேடையில் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஆங்கரை தவறாக பேசியதாக கூறப்படுகிறது. 

ஆனாலும் விருது கொடுத்து தன்னை அவமதித்த இந்த விருது தனக்கு வேண்டாம் என திருப்பி அளித்த பாலாஜியை பலரும் பார்ட்டி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News