
Cinema News
சிவகார்திகேயனையே நான் ரிஜெக்ட் பண்ணிட்டேன்.! SK முன்னால் இயக்குனரின் திமிர் பேச்சு.!
Published on
தமிழ் சினிமாவில் பல திறமையான நல்ல படைப்புகளை தரும் இயக்குனர்கள் இருக்கிறார்கள். உலக சினிமாவுடன் போட்டி போடும் அளவுக்கு நம்மிடமும் இயக்குனர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தொடர்ந்து படம் இயக்குவது இல்லை. நல்ல கதைக்காக நேரம் செலவழித்து, வருடங்கள் செலவழித்து காத்திருப்பார்கள்.
அப்படி ஒரு இயக்குனர்தான் பாலாஜி சக்திவேல். முதல் திரைப்படம் விக்ரம் நடித்த சாமுராய், இரண்டாவதாக பரத், சந்தியா நடிப்பில் வெளியான காதல். அதன் பிறகு கல்லூரி அதன் பிறகு சில வருட இடைவெளிக்கு பிறகு வழக்கு எண் 18/9. இந்த திரைப்படங்கள் பல்வேறு விருதுகளை வென்றுள்ளன. பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளன.
வழக்கு எண் 18/9 படத்தின் இயக்குனர் பாலாஜி சக்திவேல், அண்மையில் ஒரு பொது மேடையில் பேசும்போது,’ நான் நிறைய புதுமுகங்களை அறிமுகப்படுத்தி உள்ளேன் என்பது பலருக்கும் தெரியும். ஆனால், அதற்காக எத்தனை பேரை நான் நிராகரித்துள்ளேன் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும்.’
‘நான் அப்படி நிராகரித்த சிலர் தற்போது உச்ச நட்சத்திரங்களாக இருக்கின்றனர்.’ என்று கூறிக்கொண்டே, ‘நான் இந்த படத்திற்காக நிராகரித்த நபர் சிவகார்த்திகேயன்.’ என பொதுமேடையில் தெரிவித்துவிட்டார்.
இதையும் படியுங்களேன் – கொஞ்சம் தாமதமாகி இருந்தால் 60 வயது பாட்டி அதோ கதிதான்.! சூர்யா படத்தின் தியேட்டர் சம்பவம்.!
சிவகார்த்திகேயன் முகம் ஒரு கமர்சியல் திரைப்படத்திற்கான முகமாக இருந்தது. ஆதலால் நான் அவரை நிராகரித்துவிட்டேன் என கூறினார். அந்த மேடையில் சிவகார்த்திகேயனும் இருந்தார். இதனை கேட்டுகொண்டும் இருந்தார்.
உண்மையில் இந்த மாதிரியான இயக்குனர்கள் தங்களது கதைக்கு யார் பொருத்தமாக இருப்பார்கள், அது புதுமுகமாக இருந்தாலும் சரி என்று அவர்களை தான் தேர்வு செய்வார்கள். அப்போதுதான் அந்த கதைக்கு தகுந்தாற்போல காதாபாத்திரத்தின் காட்சிகள் அமையும். அப்போது தான் ஒரு சிறந்த படைப்பு உருவாகும். அதனால்தான் இந்த இயக்குனர்கள் எப்போதும் சமரசம் செய்து கொள்வதில்லை.
ரங்கராஜ் முகத்திரை கிழிப்பு : மாதம்பட்டி ரங்கராஜ் சினிமா ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசல்டா என்பவரை ஆசை வார்தத்தை கூறி ஏமாற்றி...
தீயாய் வேலை செய்யும் விஜய் : விஜய் பேச்சில் ஏற்பட்ட தடுமாற்றம் : விஜயின் பேச்சு பல விமர்சனங்களை சந்தித்தாலும் இன்று...
சினிமா நடிகர் பிரபல காமெடி நடிகர் தாடி பாலாஜி மருத்துவமனையில் உயிருக்கு போராடும் நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மூத்த பத்திரிக்கையாளர் சேகுவேரா கூறி...
Vijay TVK: திருச்சியில் தனது பிரச்சாரத்தை ஆரம்பித்த விஜய் இன்று நாமக்கல் , கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த...
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் இயக்குனர் பாரதிராஜா. தன்னுடைய படங்களில் புதுமை புகுத்தி அதுவரை வந்து கொண்டிருந்த படங்களிலிருந்து...