Categories: Cinema News latest news

தாடி பாலாஜி மனைவி நித்யாவை ஆபாசமாக திட்டிய நபர்… அதன் பின்னர் நடந்தது தான் ஹைலைட்….!

தமிழ் சினிமாவில் பல படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர் தான் காமெடி நடிகர் தாடி பாலாஜி. இதுதவிர பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ள தாடி பாலாஜி தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.

இவருக்கு நித்யா என்ற மனைவியும் போஷிகா என்ற பெண் குழந்தையும் உள்ளனர். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள். நித்யா அவர் மகள் போஷிகாவுடன் வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையிலான பிரச்சனை ஊர் அறிந்த ஒன்றுதான்.

இந்நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தாடி பாலாஜி தேவை இல்லாமல் தன்னை பற்றி மிகவும் தரக்குறைவாக பேசுவதாகவும், அவர் இவ்வாறு தொடர்ந்து பேசினால் அவர் என்னையும் என் மகளையும் ஆபாசமாக பேசிய ஆடியோ மற்றும் வீடியோவை ஒவ்வொன்றாக வெளியிடுவேன் என நித்யா வீடியோ வாயிலாக பாலாஜியை எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் இவரின் இந்த வீடியோவை கண்ட நெட்டிசன் ஒருவர், “பாலாஜி பாவம். ஓ* உன்கூட வாழ்றதுக்கு சும்மா இருக்கலாம்” என நித்யாவிற்கு மெசேஜ் செய்துள்ளார். உடனே இதற்கு பதிலளித்த நித்யா “உன்னை நினைத்தால் பாவமாக இருக்கிறது. உன்னுடைய அம்மாவோ, சகோதரியோ, மகளோ இப்படி பேசினால், அல்லது அவர்களிடம் இப்படி யாரவது பேசினால் பொறுத்துக்கொள்வாயா ? மற்றவர்களை திட்டுவதை விட்டுவிட்டு வேற எதாவது உருப்படியாக வேலைய பாரு” என பதில் அளித்துள்ளார்.

நித்யாவின் இந்த பதிலை கண்ட அந்த நபர் உடனடியாக தன் தவறை உணர்ந்து தான் அவ்வாறு பேசியதற்காக நித்யாவிடம் மன்னிப்பு கோரியுள்ளார். யாராக இருந்தாலும் அவர்களை ஆபாசமாக திட்டுவது அவ்வளவு சரியான செயல் அல்ல.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini