தலைவன் வேறலெவல்!.. அகாண்டா 2 விழாவில் பாலையா கொடுத்த ரியாக்ஷன்!. வைரல் வீடியோ...
Akhanda 2: தெலுங்கு சினிமா உலகில் மாஸ் நடிகராக வலம் வருபவர் பாலகிருஷ்ணா. இவரை ரசிகர்கள் சுருக்கமாக பாலையா என அழைக்கிறார்கள். இவரை ‘கிங் ஆப் மாஸ்’ என தெலுங்கு சினிமா ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். தான் நடிக்கும் படங்களில் அசத்தலான பன்ச் வசனம் பேசுவது பாலையாவின் ஸ்டைல். மேலும் அதிரடியான ஆக்சன் காட்சிகளும் இடம் பெற்றிருக்கும். இதனாலேயே இவரின் படங்களை பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டம் உண்டு.
அப்படி அசத்தலான பன்ச் மற்றும் அதிரடி ஆக்சன் காட்சிகளை கொண்டு உருவான திரைப்படம்தான் அகாண்டா. இந்த படத்தின் 2021ம் வருடம் வெளியானது. இப்படத்தை போயப்பட்டி ஸ்ரீனு இயக்கியிருந்தார். இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த படம் அமெரிக்காவில் வெளியானபோது பாலையாவின் ரசிகர்கள் தியேட்டரையே நாசம் செய்த சம்பவமெல்லாம் நடந்தது. தற்போது அகண்டா இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது.
அகாண்டா 2 வருகிற டிசம்பர் 5ம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. எனவே, படக்குழு புரமோஷன் வேலையை துவங்கியிருக்கிறது. இந்நிலையில், அகாண்டா 2 இசை வெளியீட்டு விழா இன்று ஹைதராபாத்தில் நடந்தது. அப்போது இந்த படத்தில் நடித்துள்ள நடிகை சம்யுக்தா மேடையில் பேசிக் கொண்டிருந்தார். அவருக்கு அருகில் பாலையா நின்று கொண்டிருந்தார்.
அப்போது பாலையா பல ரியாக்ஷன்களை கொடுத்தார். குறிப்பாக ‘டிசம்பர் 5ஆம் தேதி இப்படம் வெளியாகிறது’ என சொல்லிவிட்டு சம்யுக்தா திரும்பி பாலையாவை பார்த்தார். அப்போது பாலையா அருகில் இருந்த இயக்குனரிடம் பேசிக் கொண்டிருந்தார், சம்யுக்தா திரும்பி தன்னை பார்க்கிறார் என தெரிந்ததும் சடாரென ஒரு ரியாக்சன் கொடுத்துவிட்டு, உடனே அந்த ரியாக்ஷனை மாற்றிவிட்டு மீண்டும் பேச தூங்கிவிட்டார். இந்த வீடியோவை பலரும் இணையத்தில் பகிர்ந்து ‘தலைவன் வேறலெவல்’ என பதிவிட்டு வருகிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
