விழாவில் நடிகையிடம் எல்லை மீறிய பாலையா.. பாட்டு ஏற்படுத்திய வைப்தான் இப்படி

by Rohini |
balakrishan
X

தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் பாலகிருஷ்ணா. இவருக்கு வயது 64. கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் இதுவரை நடித்திருக்கிறார். இவருடைய நடிப்பில் தற்போது டாகு மகாராஜ் என்ற திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை பாபி கொல்லி இயக்கியுள்ளார். பாலகிருஷ்ணா உடன் இந்த படத்தில் பாபி தியோல், ஷரத்தா ஸ்ரீநாத் ,ஊர்வசி ரவுத்தேலா மற்றும் சாந்தினி சவுத்ரி போன்ற முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்த படம் வெளியாகி இதுவரை நேர்மறையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. இதற்கு முக்கிய காரணம் படத்தில் அமைந்த தாபீடி திபிடி என்ற பாடல் ஏற்படுத்திய விளம்பரம் தான். அதில் பாலகிருஷ்ணாவும் ஊர்வசியும் சேர்ந்து ஆடிய ஆட்டம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அதுவும் 64 வயதில் பாலகிருஷ்ணா இப்படி ஒரு ஆட்டத்தை ஆடுவாரா என யாருமே எதிர்பார்க்கவில்லை.


தெலுங்கு திரை உலகமே ஆடிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். அது மட்டுமல்லாமல் இதே படத்தோடு கேம் சேஞ்சர் திரைப்படமும் வெளியாக பாலகிருஷ்ணாவுக்கு முன்னால் ராம்சரணால் நிற்க முடியாது என்ற வகையில் இந்தப் பாடல் ஏற்படுத்திய அதிர்வலைகள் அதிகம். இந்த நிலையில் தற்போது பாலகிருஷ்ணா ஊர்வசி ஆகியோர் ஒரு விழாவில் இருப்பது போன்ற வீடியோ வெளியாகி இருக்கிறது.

அந்த வீடியோவில் அதே தாபீடி திபிடி பாடலுக்கு பாலகிருஷ்ணா ஊர்வசியுடன் நடனமாடி இருக்கிறார். படத்தைவிட நிஜத்தில் அவர் குத்துகிற இடத்தை பார்த்து ரசிகர்கள் நொந்து கொள்கின்றனர். வேற இடமே உங்களுக்கு கிடைக்கலையா என்றெல்லாம் கமெண்டில் கூறி வருகிறார்கள். என்னதான் அந்த பாடல் ஒரு வைபை கொடுத்தாலும் அதற்கு இப்படியா அந்த நடிகையை போட்டு பாடாய்படுத்துவது என்றெல்லாம் ரசிகர்கள் கமெண்டில் கூறி வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ:

Next Story