பிளாஸ்ட் இயக்குனரின் அடுத்த படத்தில் ஹீரோ யார் தெரியுமா?
அர்ஜூன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் பிளாஸ்ட். சுபாஷ் கே.ராஜ் இயக்கியுள்ள இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது. படம் ஆரம்பம் முதல் இறுதி வரை பரபரப்பானதிரைக்கதையால் ரசிகர்களை கட்டிபோட்டு விட்டார் இயக்குனர். இப்படத்தில் அர்ஜூனுடன் அபிராமி, பிரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பிளாஸ்ட் வெளியான நாள் முதல் பாசிடிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் வசூலிலும் பட்டையை கிளப்பி வருகிறது. இதுவரை ரூ 30 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. அர்ஜூனுக்கு மிகப்பெரிய கம்பேக்கையும் இப்படம் கொடுத்துள்ளது இப்படம்.

இந்த நிலையில் பிளாஸ் இயக்குனரின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இவரது அடுத்த படத்தையும் ஏஜிஎஸ் நிறுவனமே தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் நாயகனாக நடிக்க நடிகர் கார்த்தியிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
