balu
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். இவ்ளோ சிறு வயதில் பல சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் மனப்பக்குவம் ஒரு சில நடிகர்களுக்கு மட்டுமே இருக்கும். அது தனுஷுக்கு அதிகமாகவே இருக்கிறது. அசுரன் படத்தில் யாரும் எதிர்பாராத அசாத்திய நடிப்பை தனுஷ் வெளிப்படுத்தியிருப்பார்.
இவரின் கெரியர் ஒரு ஏறுமுகமாகவே இருப்பதற்கு ஒரு வழியில் துணையாக இருந்தவர் வெற்றுமாறன். இவர்களின் கூட்டணி ‘பொல்லாதவன்’ படத்தில் இருந்தே ஆரம்பமானது என்று சொன்னாலும் அதற்கு பின்னனியில் ஒரு சம்பவமும் இருக்கின்றது.
வெற்றிமாறன் ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திராவுடன் பல காலம் உதவியாளராக இருந்தவர். ஒரு சமயம் பாலுமகேந்திராவும் வெற்றிமாறனும் காரில் போய்க் கொண்டிருக்கும் போது தனுஷின் போஸ்டரை வெளியில் பார்த்திருக்கிறார்கள்.
தனுஷை பார்த்ததும் பாலுமகேந்திரா ‘இவன் ஒரு நாள் பெரிய ஆளாக வருவான் பாரு, கண்டிப்பாக அனைவரும் போற்றத்தக்க நடிகராக வருவான்’ என்று வெற்றிமாறனிடம் கூறியிருக்கிறார்.
பாலுமகேந்திரா தன்னை பற்றி பாராட்டியதை கேள்விப்பட்டு தனுஷ் உடனடியாக பாலுமகேந்திராவை பார்க்க வந்தாராம். அதன் பிறகு ஆரம்பித்த படம் தான் ‘அது ஒரு கனா காணும் காலம்’ திரைப்படம். அந்த படத்தை இயக்கியவர் பாலுமகேந்திரா தான். மேலும் அதில் வெற்றிமாறன் உதவியாளராக இருந்திருக்கிறார்.
அப்போது இருந்தே வெற்றிமாறனுக்கும் தனுஷுக்கும் இடையே ஒரு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதன் பிறகு வெற்றிமாறனின் திருமணம் ஏற்பாடு செய்யப்பட திருமணத்திற்காக ஒரு லட்சம் ரூபாய் வெற்றிமாறனுக்கு தேவைப்பட்டதாம்.
யாரிடம் கேட்க என தயங்கிய நிலையில் தனுஷிடம் கேட்டிருக்கிறார். தனுஷும் என்ன ஏது என ஒரு வார்த்தை கூட கேட்காமல் பணத்தை அப்படியே கொடுத்தாராம். அதிலிருந்தே இருவருக்கும் ஒரு ஆழமான நெருக்கம் ஆரம்பித்து விட்டதாம். அதனை தொடர்ந்து தான் பொல்லாதவன், ஆடுகளம், அசுரன் , வடசென்னை என தொடர்ந்து வெற்றிப் படங்களை தனுஷை வைத்து கொடுத்து சினிமாவை ஆச்சரியப்பட வைத்தார். அதிலிருந்தே தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி ஒரு பலமான கூட்டணி என்றே கூற ஆரம்பித்தனர்.
இதையும் படிங்க : தியேட்டரை இழுத்து மூடுங்க!.. ‘விடுதலை’ படத்தை பார்த்து விட்டு சீமான் ஆவேசமான பேச்சு.
STR49 :…
TVK Vijay:…
Vijay: தமிழ்…
Idli kadai:…
Vijay: கரூரில்…