வடிவேலு சார் ஆபிஸுக்கே வரக் கூடாதுன்னு சொல்லிட்டார், விஜயகாந்த் சார் இருந்திருந்தா?.. பாவா லட்சுமணன் வருத்தம்!

 
Bava lakshmanan vijayakanth vadivelu

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் பாவா லட்சுமணன். இவர் ஆரம்பத்தில் சினிமாவில் புரொடக்ஷன் மேனேஜர் ஆக வேலை பார்த்து வந்தார்.

அதன் பிறகு நடிகராக களமிறங்கினார். சரத்குமாரின் 'மாயி' படத்தில் பாவா லட்சுமணன் நடித்த காமெடி காட்சி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கி அவருக்கு நிறைய பட வாய்ப்புகளை பெற்று தந்தது.

'மாயி' படத்திற்கு பிறகு 'ஆனந்தம், அரசு, ஏய், கோவை பிரதர்ஸ், பேரரசு, பிரிவோம் சந்திப்போம், பட்டத்து யானை, ஒஸ்தி, எதிர் நீச்சல், கலகலப்பு, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' போன்ற பல படங்களில் காமெடியில் கலக்கினார்.

சமீபத்தில், பாவா லட்சுமணனுக்கு காலில் மூன்று விரல்கள் அகற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு பட வாய்ப்புகளும் இல்லாததால், லெஜண்ட் சரவணன் அவருக்கு ரூ.2 லட்சம் கொடுத்து உதவி செய்துள்ளார்.

தற்போது, பாவா லட்சுமணன் கொடுத்துள்ள பேட்டியில் "முதலில் வீடு பார்த்து தங்க வேண்டும். உடனே, லெஜண்ட் சரவணன் சாரை நேரில் சென்று பார்த்து நன்றி சொல்ல வேண்டும். 'சூப்பர் குட் பிலிம்ஸ்' ஆர்.பி.சௌத்ரி சார், நடிகர்கள் விஜயகாந்த் சார், மனோபாலா சார், மயில்சாமி சார், விவேக் சார் இவங்க எல்லாரும் இருந்திருந்தா எனக்கு கண்டிப்பா உதவி பண்ணியிருப்பாங்க. வடிவேலு சார் கூட பல படங்களில் நடித்துள்ளேன். ஆனால், அவர் என்னை ஆபிஸுக்கே வரக் கூடாதுன்னு சொல்லி விட்டார்" என்று கூறியுள்ளார்.

From Around the web