நான் சிவாஜியையே பார்த்தவன்!.. வினுசக்கரவர்த்திக்கு ஓங்கி அறை விட்ட மேக்கப் மேன்!.. செம சண்டை!..

பவா லட்சுமணன் தொடர்ந்து சினிமாவில் நடந்த பழைய விஷயங்களை எல்லாம் பேசி வருகிறார். ஏகப்பட்ட சுவாரஸ்ய நிகழ்வுகளை கூறி வருகிறார். சமீபத்தில், டி. ராஜேந்தர் பற்றி அவர் பேசியதையும் அப்பட்டமாக கூறினார்.

மும்பையில் கேப்ரே டான்ஸ் ஆடிட்டு இருந்த மும்தாஜை ஹீரோயினாக்கிய நிலையில், நீயெல்லாம் எனக்கு அட்வைஸ் பண்ணக் கூடாது என ஷூட்டிங் ஸ்பாட்டில் மும்தாஜை வாய மூட சொன்னார் என பவா லட்சுமணன் கூறியிருந்தார்.

அந்த வரிசையில் தற்போது மேக்கப் மேனுக்கும் வினு சக்கரவர்த்திக்கும் இடையே ஏற்பட்ட சண்டை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார் பவா லட்சுமணன். பெரும் புள்ளி எனும் படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த சம்பவத்தை அந்த பேட்டியில் விரிவாக பவா லட்சுமணன் கூறியுள்ளார்.

விக்ரமன் இயக்கத்தில் 1991ம் ஆண்டு வெளியான படம் பெரும்புள்ளி. அந்த படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற்றது. ஒரு நாள் காலை 7 மணிக்கு படப்பிடிப்பு நடத்த இயக்குனர் திட்டமிட்ட நிலையில், வினுசக்கரவர்த்தி தூங்கி விட்டார். இயக்குனர் வந்து வினுசக்கரவர்த்தி ஏன் ஷாட்டுக்கு வரலைன்னு திட்டிட்டார்.

வினுசக்கரவர்த்தி கூட இருந்த மேக்கப்மேனிடம் உன்னை 5.30 மணிக்கு எழுப்ப சொன்னேன் ஏன் எழுப்பல என சொல்லி அறைந்து விட்டார். அதற்கு உடனடியாக அந்த மேக்கப் மேன் எதிர்வினையாற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என பவா லட்சுமணன் பேசியுள்ளார்.

வினுசக்கரவர்த்தி அடித்ததும் நான் சிவாஜிக்கே மேக்கப் போட்டவன். நீ என்னடா கருவாப்பயா என்னை அடிக்கிறது. நீ ஷூட்டிங் போகணும்னா நீ தான் அலாரம் வச்சு எந்திரிக்கணும் என ஓங்கி ஒரு அறை விட்டு விட்டாராம். உடனடியாக அறைக்கு வெளியே இருந்த அனைவரும் அந்த நிகழ்வை பார்த்ததும் வினுசக்கரவர்த்தி அசிங்கமாகி விட்டது. கதவை சாத்திக் கொண்டாவது அடியென சொல்ல, இயக்குனரின் உதவியாளர்கள் வந்து பிரச்சனையை தீர்த்தனர் என்றார்.

Related Articles

Next Story