Categories: Cinema News latest news

என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கக் கூடாதா? ஆதங்கப்பட்ட அஜித்.. பாவா லட்சுமணன் சொன்ன தகவல்

Actor Ajith: தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் ஹீரோவாக இருந்து வருபவர் நடிகர் அஜித். தற்போது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் குட்பேட்அக்லி திரைப்படத்திலும் நடித்து வருகிறார். விடாமுயற்சி படம் கடந்த ஒன்றரை வருட காலமாக நீண்ட இழுபறியில் இருக்க இப்பொழுதுதான் அந்த படத்தின் படப்பிடிப்பில் சூடு பிடித்திருக்கிறது.

இந்த வருட தீபாவளி அன்று படம் கண்டிப்பாக ரிலீஸ் ஆகும் என்று சொல்லப்படுகிறது. அஜித்தை பொறுத்த வரைக்கும் தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பவர். அவருடைய படங்களுக்கு என ஒரு தனி மாஸ் இருந்து வருகிறது .அது மட்டுமல்லாமல் பிரபலங்கள் மத்தியிலும் அஜித்துக்கு ஒரு தனி மரியாதையே இருக்கிறது.

இதையும் படிங்க: பெண்களின் மீது ஆண்களின் பார்வை இப்படித் தானே இருக்கு… சென்சாரில் தப்பித்த பாக்கியராஜ் படத்தைப் பாருங்க

சினிமா மட்டுமல்லாமல் அவருக்கே மிகவும் பிடித்தமான பைக் ரேஸ், கார் ரேஸ் இவற்றிலும் அவ்வப்போது அஜித் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் கூட துபாயில் கார் ரேஸில் ஈடுபடுவது மாதிரியான பல வீடியோக்கள் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் அஜித். இந்த நிலையில் அஜித்தை பற்றி பிரபல காமெடி நடிகர் பாவா லட்சுமணன் ஒரு தகவலை பகிர்ந்திருக்கிறார்.

வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் காமெடி நடிகராக நடித்தவர் பாவா லட்சுமணன். அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் நீண்ட நாட்களாக படுத்த படுக்கையிலேயே இருந்தார் . அப்போது சின்னத்திரை பிரபலம் கேபிஒய் பாலாதான் பாவா லட்சுமணனுக்கு தேவையான உதவிகளை செய்து இன்று ஒரு நல்ல நிலைமையில் இருக்கிறார்.

இதையும் படிங்க: தங்கச்சியின் இழப்பு இருந்தாலும் விஜயின் அமைதிக்கு அது காரணம் இல்லையாம்.. டீச்சர் சொன்ன சீக்ரெட்

அஜித்துடன் ஒரு சில படங்களில் நடித்த பாவா லட்சுமணன் ஒரு படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் அஜித்தை சந்தித்தாராம் .அப்போது அஜித் பாவா லட்சுமணனிடம் ‘ உனக்கு என்ன வேணும்? ஏதாவது என்னிடம் கேள்’ எனக் கேட்டாராம். அதற்கு பாவா லட்சுமணன்  ‘அதெல்லாம் ஒன்னும் வேணாம் சார். இப்படி நீங்க கேக்குற இந்த அன்பு மட்டும் இருந்தா போதும்’ என கூறினாராம் .அதற்கு அஜித்  ‘யார் யாரோ எண்ணலாமோ கேட்குறாங்க. நீ என்னையா கேட்டாலும் சொல்ல மாட்டேன்ற’ என சொல்லிவிட்டு சென்றாராம் அஜித். தமிழ் சினிமாவில் அஜித் ஒரு நல்ல மனிதர் என பாவாலட்சுமணன் கூறியிருக்கிறார்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini