Categories: Cinema News latest news

அவமானப்படுத்திய நதியா… ஷோபனாவை வைத்து பழிவாங்கிய கேப்டன்…? என்னப்பா சொல்றீங்க?

தமிழின் முன்னணி நடிகரான விஜயகாந்த், 1980களில் அப்போதுள்ள டாப் கதாநாயகிகளோடு பல திரைப்படங்களில் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார். அதே போல் அந்த காலகட்டத்தில் நடிகை நதியா தமிழின் டாப் ஹீரோயின்களில் ஒருவர்.

இந்த நிலையில் ஒரு திரைப்படத்திற்காக விஜயகாந்துக்கு ஜோடியாக நடிக்க நதியாவிடம் கேட்டிருக்கிறார்கள். நதியா விஜயகாந்துக்கு ஜோடியாக நடிக்க மறுத்திருக்கிறார். நதியா கேரளாவைச் சேர்ந்தவர்.

ஆதலால் நதியாவைப் போலவே கேரளாவைச் சேர்ந்த ஒரு நடிகையை தனது திரைப்படத்தில் நடிக்க வைக்க முடிவு செய்தாராம் விஜயகாந்த். அதன்படி 1989 ஆம் ஆண்டு நடிகை ஷோபனாவை கதாநாயகியாக தேர்ந்தெடுத்து “பொன்மன செல்வன்”, “பாட்டுக்கு ஒரு தலைவன்” என்று இரண்டு திரைப்படங்களில் நடித்தாராம் விஜயகாந்த்.

 விஜயகாந்தின் நிறத்தை காரணம் காட்டி அவருடன் நதியா நடிக்க மறுத்தாராம். ஆதலால் விஜயகாந்த் இதனை பழிவாங்கும் வகையில் ஷோபனாவுடன் நடித்தார் என பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவில் கூறியுள்ளார்.

எப்போதும் பயில்வான் ரங்கநாதன் பேசும் விஷயங்கள் இணையத்தில் சர்ச்சையை கிளப்புவது உண்டு. அதே போல்தான் இந்த செய்தியும் இணையத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

“விஜயகாந்த் கருப்பாக இருந்ததனால்தான் நதியா அவருடன் நடிக்க மறுத்தார் என்ற செய்தி உண்மைக்கு புறம்பானது எனவும், 1987 ஆம் ஆண்டே நதியா விஜயகாந்துடன் இணைந்து பூ மழை பொழியுது என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்” எனவும் நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.

அதே போல் “நதியா நிறத்தை காரணம் காட்டித்தான் விஜயகாந்துடன் நடிக்க மறுத்த செய்தி உண்மை என்றால் அவர் ஏன்  ரஜினிகாந்த்துடன் இணைந்து “ராஜாதி ராஜா” திரைப்படத்தில் நடித்தார்?” என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

இப்படி ஒரு கேள்வி எழும் என்று முன்னமே தெரிந்துவைத்திருந்த பயில்வான் ரங்கநாதன் அந்த வீடியோவில் “ரஜினிகாந்த் ஒரு சூப்பர் ஸ்டார் அந்தஸ்து நடிகர். அவருடன் நடிக்க மறுத்தால் தேவையில்லாத பிரச்சனைகள் வரும் என்பதனால்தான் நதியா ஒப்புக்கொண்டார்” என கூறியிருக்கிறார். எனினும் பயில்வான் ரங்கநாதன் கூறிய இந்த செய்தி இணையத்தில் நெட்டிசன்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Arun Prasad
Published by
Arun Prasad