Categories: Cinema News latest news

ஜெய் ஆகாஷை மேடையில வச்சிட்டே எக்ஸ் லவ்வர் பத்தி பேசிய பயில்வான்!.. வைரலாக்கி சண்டை போடும் ஃபேன்ஸ்!

நடிகர் ஜெய் ஆகாஷ் ரோஜாவனம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். பெண்கள், ரோஜாக்கூட்டம், இனிது இனிது காதல் இனிது உள்ளிட்ட தமிழ் படங்களிலும் அதிகமான தெலுங்கு படங்களிலும் நடித்து வந்தார்.

அஜித், பிரசாந்த் போல அழகான ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமான அவரை ஏகப்பட்ட ரசிகைகள் விரும்ப ஆரம்பித்தனர். அப்படியொரு ரசிகை ஜெய் ஆகாஷை லண்டனில் சந்தித்து காதலித்து வந்தார்.

இதையும் படிங்க: 3 பேர் பலி.. கேஜிஎஃப் ஹீரோ பிறந்தநாளில் நடந்த சோகம்.. துக்க வீட்டுக்குச் சென்று கதறியழுத யஷ்

ஆனால், அந்த ரசிகை ஜெய் ஆகாஷை விட்டு விட்டு இன்னொரு பிரபல நடிகரை காதலித்து திருமணமும் செய்துக் கொண்டார். சுமார் 6 மாதங்களுக்கு முன் நடந்த யோக்கியன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஜெய் ஆகாஷ் மேடையில் இருக்கும் போதே பயில்வான் ரங்கநாதன், அந்த பழைய குப்பையை கிளற அரங்கமே ஆடிப் போய் விட்டது.

பிரபலங்களின் அந்தரங்க வாழ்க்கை பற்றி அதிகம் பேசி வரும் பயில்வான் ரங்கநாதன் அந்த பிரபல நடிகர் மனைவி குறித்து பேசியதும் ஜெய் ஆகாஷ் கொடுத்த ரியாக்‌ஷனை வைத்து சோஷியல் மீடியாவில் தற்போது விஜய், ரஜினி மற்றும் அஜித் ரசிகர்கள் சண்டைப் போட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கேப்டன் நடிக்க வேண்டிய படம்! வடிவேலுவால் எல்லாம் போச்சு – பலமான கூட்டணியா இருந்திருக்கே

அதற்கு காரணம், நடிகர் ஜெய் ஆகாஷ் ஆரம்பத்தில் சங்கீதாவை காதலித்ததாக கிசுகிசுக்கள் கிளம்பின. அதன் பின்னர், நடிகர் விஜய்யை அவர் காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். அப்போதே அந்த கிசுகிசுவை எழுதியது பயில்வான் ரங்கநாதன் தான் என்று அவரே மேடையில் சங்கீதாவின் பெயரை குறிப்பிடாமல் பேசியதும் ஜெய் ஆகாஷ் உள்ளிட்ட அனைவருமே சிரித்து விட்டனர்.

 

Saranya M
Published by
Saranya M