Categories: Cinema News latest news

சேரன் பட இயக்குநரை டார் டாராக கிழித்த பயில்வான் ரங்கநாதன்!.. பதில் சொல்லமுடியாமல் வடிவேலாவே மாறிட்டாரே!..

என்னோட சேரன் நிர்வாக நடித்துள்ள தமிழ் குடிமகன் படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான இசக்கி கார்வண்ணனை பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேள்வி கேட்டு பங்கம் பண்ணியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

இயக்குனர் சேரன் நடிகர் விஜயின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர், நடிகர் லால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தமிழ் குடிமகன். விரைவில் வெளியாக உள்ள இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

இதையும் படிங்க: போச்சே போச்சே.. கிரண் மட்டுமில்லை!.. கிக்கேற்றும் அந்த கில்மா நடிகையையும் கொத்தாக தூக்கிய நாகார்ஜுனா!..

அப்போது இந்தப் படத்தில் சாதியை ஒழிக்க முடியாது என இடம்பெற்றுள்ள வசனம் குறித்து பயில்வான் ரங்கநாதன் கேள்வி எழுப்பினார். அந்தக் கேள்விக்கு சரியாக பதிலளிக்க முடியாமல் இயக்குனர் இசக்கி கார்வண்ணன் திணறிய காட்சிகள் தற்போது யூடியூபில் வைரலாகி வருகிறது.

அதனைத் தொடர்ந்து மற்ற பத்திரிகையாளர்களும் தமிழ் குடிமகன் படத்தின் இயக்குனரை சூழ்ந்து கொண்டு எந்த இடத்தில் அந்தக் குறிப்பிட்ட சாதியினரை தாழ்த்தப்பட்டவர்கள் எனக் கூறுகின்றனர் என கேள்வி எழுப்பினர். அதற்கு தென்காசி மாவட்டத்தில் அப்படி ஒரு வழக்கு இருக்கிறது என இயக்குனர் பதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: 3 மாசம் முண்டா பனியனோட போட்டோ வராது!.. தமிழ் ரசிகர்களுக்கு தண்ணி காட்டிய கிரண்!.. என்ன ஆச்சு தெரியுமா?

மேலும் இதே கேள்வியை தணிக்கைக் குழுவும் தன்னிடம் கேட்டதாகவும் அதற்கு அவர் ஆதாரத்தை கொடுத்த நிலையில் தான் தணிக்கை செய்யப்பட்டதாகவும் போதி ஆதாரங்கள் யூடியூப் உள்ளிட்டவற்றில் இருப்பதாக பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு சட்டென சரியாக தெளிவான பதிலை கூற முடியாமல் இயக்குனர் இசக்கி கார்வண்ணன் திணறிய காட்சிகள் தீயாய் பரவி வருகிறது.

ஒரு கட்டத்தில் இயக்குனர் சேரன் பின்னாடி இருந்து அமைதியா விடுங்க என முதுகில் தட்டிக் கொடுத்த காட்சிகளும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன. இயக்குனர்கள் பா ரஞ்சித், மாரி செல்வராஜ் போல நீங்களும் சாதியை வைத்து படம் இயங்குகிறதா என்கிற கேள்வியையும் பத்திரிகையாளர்கள் தமிழ் குடிமகன் இயக்குனரை பார்த்து எழுப்பியுள்ளனர்.

Saranya M
Published by
Saranya M