Connect with us
bayilvan

Cinema News

பிரபாஸை ஓவர்டேக் செய்த அல்லு அர்ஜுன்!… புஷ்பா 2 எப்படி இருக்கு?.. பயில்வான் என்ன இப்படி சொல்லிட்டாரு!..

புஷ்பா 2 திரைப்படம் குறித்து சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் தனது விமர்சனத்தை பகிர்ந்திருக்கின்றார்.

புஷ்பா 2 திரைப்படம்:

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் புஷ்பா 2. இந்த திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து கடந்த மூன்று வருடங்களாக இப்படத்தின் இரண்டாவது பாகத்தை படக்குழுவினர் மிகப்பெரிய பொருள் செலவில் எடுத்து வந்தார்கள்.

இதையும் படிங்க: சூரியுடன் இணையும் பொன்னியின் செல்வன் பட நடிகை!.. அட இவங்களா?.. கொஞ்சம் உஷாரா இருங்க..

மிகப்பெரிய ஹிட்

முதல் பாகமே 1000 கோடி வசூல் செய்து பான் இந்தியா ஹிட் கொடுத்தது. முதல் பாகமே மிகப்பெரிய வரவேற்பை பெற்றதால் இரண்டாவது பாகம் நிச்சயம் 2000 கோடியை வசூல் செய்யும் என்று பலரும் கூறி வருகிறார்கள். மேலும் இந்த திரைப்படம் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்று கொடுத்தது.

pushpa 2

pushpa 2

இதனால் தெலுங்கு சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவில் மிகப் பெரிய இடத்தை பிடித்திருக்கின்றார் நடிகர் அல்லு அர்ஜுன். இன்று 12000 திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் படம் வெளியாகி இருக்கின்றது. முதல் நாளிலிருந்து படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. ரசிகர்கள் தொடங்கி சினிமா விமர்சனங்கள் வரை அனைவரும் படத்திற்கு பாசிட்டிவான ரிவ்யூக்களை கொடுத்து வருகிறார்கள்.

பயில்வான் ரங்கநாதன் விமர்சனம்:

அந்த வகையில் பயில்வான் ரங்கநாதன் தனியார் youtube நிகழ்ச்சி ஒன்றுக்கு புஷ்பா 2 திரைப்படம் குறித்து பேட்டி அளித்து இருக்கின்றார். பொதுவாக பயில்வான் ரங்கநாதன் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் பாசிட்டிவான விஷயங்களை கூறும் அளவிற்கு நெகட்டிவ்வான கருத்துக்களை கூறுவதில் வல்லவர். ஆனால் முதல் முறையாக புஷ்பா 2 திரைப்படத்திற்கு அவர் முழுக்க முழுக்க பாசிட்டிவ் விமர்சனங்களை கூறியிருப்பது அனைவருடைய மிகப்பெரிய ஆச்சிரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

பாசிட்டிவ் விமர்சனம்:

அந்த விமர்சனத்தில் அவர் தெரிவித்திருந்ததாவது ‘வட இந்தியாவில் இருந்து வரும் படங்கள் தற்போது வசூலில் சாதனை படைத்து வருகின்றது. பாகுபலி படத்திற்கு பிறகு ஆர்ஆர்ஆர், புஷ்பா 1 போன்றவை வசூல் சாதனை படைத்து வருகின்றன.  அந்த வரிசையில் புஷ்பா 2 திரைப்படம் இடம் பிடித்திருக்கிறது. மேலும் இப்படத்தில் ஒவ்வொருவரின் நடிப்பும் பட்டையை கிளப்பி இருக்கின்றது.

இப்படத்தில் மொத்தம் மூன்று ஹீரோயின்கள் இருக்கிறார்கள். முதலில் ராஷ்மிகா மந்தனா, இரண்டாவது ஸ்ரீலீலா இருவரும் போட்டி போட்டுக் கொண்டு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்கள். மூன்றாவது ஹீரோயின் யார் என்றால் அல்லு அர்ஜுன் தான். அவர் லேடி கெட்டப்பில் ஒரு பாடலுக்கு பட்டையை கிளப்பி இருப்பார்.

bayilvan

bayilvan

நடிகர் பிரபாஸ் தற்போது அதிகம் சம்பளம் வாங்கக்கூடிய நடிகராக இருந்து வருகின்றார். அவரை எல்லாம் தற்போது ஓரம் கட்டி இருக்கின்றார் அல்லு அர்ஜுன். இந்த திரைப்படத்தின் மூலமாக அவருக்கு 300 கோடி ஷேர் வரப்போகின்றது. இதன் மூலமாக இந்திய சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக மாறப் போகின்றார் அல்லு அர்ஜுன்.

இதையும் படிங்க: வாளிப்பான உடம்பு வசியம் பண்ணுது!.. அந்த இடத்த ஓப்பனா காட்டும் கோட் பட நடிகை!…

பகத் பாஸில் இந்த திரைப்படத்தில் மிகச் சிறந்த நடிப்பை கொடுத்திருக்கின்றார். இப்படத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும் சிறப்பாக வந்திருக்கின்றது. இதற்கு முக்கிய காரணம் தேவி ஸ்ரீ பிரசாத் தான். இருப்பினும் கங்குவா படத்தில் அவரின் ரீ ரெக்கார்டிங் மிக மோசமாக இருந்ததால் அவரை துரத்தி விட்டார்கள்.

தமன் இந்த திரைப்படத்திற்கு பின்னணி இசை அமைத்திருக்கின்றார். படத்தில் பேக்ரவுண்ட் ஸ்கோர் மிகச் சிறப்பாக வந்திருக்கின்றது. படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுக்கும்’ என்று படத்தை புகழ்ந்து பேசி இருக்கின்றார் பயில்வான் ரங்கநாதன்.

author avatar
ramya suresh
Continue Reading

More in Cinema News

To Top