Categories: Cinema News latest news throwback stories

எம்ஜிஆரை பற்றி இதுவரை தெரியாத ஒரு ரகசியத்தை பகிர்ந்த பயில்வான் ரங்கநாதன்!.. அச்சச்சோ இப்படி சொல்லிட்டீங்களே…

தமிழ் திரையுலகில் எம்.ஜி.ஆர் ஒரு லட்சிய நடிகராக திகழ்ந்து வந்தார். அதுமட்டுமில்லாமல் தமிழ்நாட்டின் தன்னிகரில்லாத தலைவராகவும் திகழ்ந்து வந்தார். மக்கள் திலகம் ,பொன்மனச் செம்மல், புரட்சித்தலைவர் என பல அடைமொழிகளால் மிகவும் அன்போடு ரசிகர்களால் அழைக்கப்பட்டு வந்தார்.

அதிக செல்வாக்கு உள்ள நடிகர்

நடிகர்களிலேயே மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு மிக்க நடிகராகவும் வலம் வந்தார். அதனாலயே மிகவும் எளிதாக தமிழகத்தின் ஒரு முதலமைச்சராக மாபெரும் ஆளுமையாக அவரால் இருக்க முடிந்தது. இலங்கையிலிருந்து வந்தவர் என்றாலும் தமிழ்நாட்டின் ஒரு செல்லப் பிள்ளையாக தமிழ்நாட்டின் ஒரு சொத்தாக மக்கள் மத்தியில் என்றுமே நிலைத்து வந்தார் எம்ஜிஆர்.

mgr1

சதிலீலாவதி என்ற திரைப்படத்தின் மூலம் 1936 ஆம் ஆண்டு தன்னுடைய அறிமுகத்தை தமிழ் சினிமாவில் பதித்த எம்ஜிஆர் காவல்காரன் ,மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன், உலகம் சுற்றும் வாலிபன், ரிக்ஷாக்காரன், நாடோடி மன்னன் போன்ற மாபெரும் வெற்றி படங்களில் நடித்து தன்னுடைய அந்தஸ்தை நிலை நிறுத்தினார். சினிமாவில் ஒரு பக்கம் கோலோச்சி வந்தாலும் அரசியலிலும் பல நல்ல திட்டங்களால் மக்கள் மத்தியில் நிலையாக இடம் பிடித்தார்.

ஏன் மக்கள் திலகம் ஆனார்

மக்கள் திலகம் என்ற பெயருக்கு ஏற்றார் போல மக்கள் மத்தியில் என்றுமே ஒரு நல்ல மனிதராக ஒரு நல்ல தலைவராக ஒரு நல்ல ஆளுமையாக என்றுமே திகழ்ந்து வந்தார் எம்ஜிஆர். அவரின் புகழ், பெருமை இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிரபல பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் எம்ஜிஆரை பற்றி இதுவரை ஒரு தெரியாத ரகசியத்தை பகிர்ந்திருக்கிறார்.

mgr2

அதாவது சமீபத்தில் மறைந்த நடிகர் மனோபாலாவை பற்றி சில தகவல்களை பகிர்ந்த பயில்வான் ரங்கநாதன் கூடவே எம்ஜிஆரை பற்றியும் ஒரு தகவலை கூறினார். தொகுப்பாளினி ஒருவர் மனோபாலாவிற்கு இயல்பாகவே பெண்மை தன்மை கொண்ட குணம் இருக்கிறது அல்லவா? என்று கேட்டிருந்தார்.

இதையும் படிங்க : இயக்குனரால் கண்ணீர் விட்ட சூதுகவ்வும் நடிகர்… ஆனா அடுத்த நாள் நடந்ததுதான் சர்ப்ரைஸ்!.

பெண்மைத்தன்மை மிக்க நடிகர் எம்ஜிஆர்

அதற்கு பதில் அளித்த பயில்வான் ரங்கநாதன் அவருக்கு இயல்பாகவே பெண்மை தன்மை கொண்ட குணம் இருக்கிறது .அதனாலேயே அவருடைய பாடி ஷேப் சில படங்களில் பெண்மையை அவ்வப்போது ஞாபகப்படுத்தும் விதமாக அமைந்திருக்கும், என்று கூறிவிட்டு அதேபோல புரட்சித்தலைவர் எம்ஜிஆரிடமும் அந்தப் பெண்மை தன்மை கொண்ட குணம் இருக்கிறது. அதை காவல்காரன் படத்தில் நாம் எளிதாக பார்க்க முடியும் என்று கூறினார்.

mgr3

Published by
Rohini