×

பஸ்சில் பெண்களை உரசினேன்... தோல்விக்கு இரண்டு மனைவிகள் தான் காரணம்...

சினிமாவில் பெரியளவில் சரவணனால் ஈடுபாடு தரமுடியவில்லை என்று பயில்வான் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் கூறியிருந்தார்.
 
saravanan

தமிழ் சினிமாவில் கிராமத்து கதைகளமாக உருவாக தேசிய விருது பெற்றபடம் பருத்தி வீரன். கார்த்தி, பிரியாமணி, சரவணன் உள்ளிட்ட நடிகர் நடிகைகள் நடித்து பெரியளவில் ஹிட் கொடுத்தது. 
அப்படத்தில் சித்தப்புவாக எதார்த்தமாக நடித்து அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தவர் சரவணன்.

ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் சிறு பட்ஜெட் பட கதாநாயகனாக திகழ்ந்து பின் வாழ்க்கையையே தொலைத்தாராம்.

அதற்கு முழுக்க காரணமாக இருந்தது அவரின் இரு மனைவிகள் தானாம். சினிமா பிரபலங்கள் இரு மனைவிகள் வைத்திருப்பது புதிதான விஷயமாக இருக்காது. அப்படி இரு திருமணங்களை செய்ததால் பல பிரச்சனைகள் உருவாகியதாம். 

இதனால் சினிமாவில் பெரியளவில் சரவணனால் ஈடுபாடு தரமுடியவில்லை என்று பயில்வான் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் கூறியிருந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் பெண்களை பஸ்சில் உரசதான் செல்வேன் என்று சர்ச்சையாக பேசி நிகழ்ச்சியை விட்டு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதையடுத்து சில படங்களில் கமிட்டாகி நடித்தும் பிக்பாஸ் மூலம் கிடைத்த பணத்தை வைத்து சேலத்தில் சினிமா ஸ்டூடியோவை கட்டி முடித்துள்ளார் என்று பயில்வான் அவர்கள் கூறியுள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News