×

ஐபிஎல் போட்டிகளை எப்போது நடத்துவது - பிசிசிஐ இன்று ஆலோசனை

 
ipl

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் 2வது அலை வீசி வருகிறது. தினமும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வந்தனர். ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் காரணமாக அது குறைய துவங்கியுள்ளது. கொரோனா ஊரடங்கால் இந்தியாவில் விளையாட்டு போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில், அதிக ரசிகர்களை கொண்ட கிரிக்கெட் போட்டிகளும் தடை பட்டுள்ளது. 

குறிப்பாக, இந்தியாவில் நடைபெற்று வந்த 14வது ஐபிஎல் போட்டிகள் மே மாதம் 4ம் தேதி முதல் நிறுத்தப்பட்டுள்ளது கிரிக்கெட் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் போட்டியில் விளையாடும் 4 அணி வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டதால் ஐபிஎல் போட்டி நிறுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கொரோனாவல் நிறுத்தப்பட்ட மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை எப்போது நடத்துவது என பிசிசிஐ இன்று ஆலோசனை நடத்தவுள்ளது. பிசிசிஐ தலைவர் கங்குலி தலைமையில் சிறப்பு பொதுக்கூழு கூட்டம் காணொலி மூலம் இன்று நடைபெறுகிறது. 

From around the web

Trending Videos

Tamilnadu News