Categories: Cinema News latest news

இசை வெளியீட்டு விழா இல்லை.! ஆனால் தளபதி விஜய் வேற பிளான் வைச்சிருக்கார் தெரியுமா.!?

தளபதி விஜய் நடிப்பில் அடுத்த மாதம் வெளியாக உள்ள திரைப்படம் பீஸ்ட். அடுத்த மாதம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால், அதே தேதியில் கே.ஜி.எப்-2 திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளதால், பீஸ்ட் படத்தை ஒரு நாள் முன்னதாக வெளியிட படக்குழு ஆலோசித்து வருகிறதாம்.

இதனால், இன்னும் அதிகாரபூர்வ தேதி அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெறுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த வேளையில், இப்படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடைபெறாது என்றே தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் ரசிகர்கள் மிகுந்த மன வேதனை அடைந்தனர். விஜய் இசைவெளியீட்டு விழாவில் பேசுவதை கேட்கவே பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் டிக்கெட் எடுத்து வருவார்கள். ஆனால் அது இந்த முறை இல்லை என்கிற நிலை தான் தற்போது வரை நிலவுகிறது.

இதையும் படியுங்களேன் – இந்த விஷயத்திற்கு எந்த நடிகனும் ஒத்துக்கமாட்டாங்க.! சூர்யாவுக்கு உண்மையில் பெரிய மனசு சார்.!

ஆதலால், வெகு வருடங்கள் கழித்து டிவி நிகழ்ச்சியில் விஜய் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம், ஏப்ரல் 14ஆம் தேதி பீஸ்ட் சிறப்பு நிகழ்ச்சி சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளதாக கூறப்படுகிறது. இதில் விஜய் கண்டிப்பாக கலந்துகொள்வார் என கூறப்படுகிறது.

இசை வெளியீட்டு விழா இல்லாத குறையை போக்க விஜய் இதில்  கலந்துகொள்வார் என கூறப்படுகிறது. விரைவில் இதற்கான ப்ரோமோ வெளியாக வாய்ப்பிருக்கிறது என கூறப்படுகிறது.

Manikandan
Published by
Manikandan