தளபதி விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வமாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துவிட்டது. ஆனால் , பல தியேட்டர்காரர்கள், ரசிகர்கள் என பலரும் ஏப்ரல் 14 படம் ரிலீஸ் என்கிற மனநிலையில் தான் இருக்கின்றனர்.
அதுதான் 90 சதவீத உண்மையும் கூட. இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளது. நெல்சன் இயக்கியுள்ளார். இதே சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் தான் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படமும் தயாராகியுள்ளது.
இதையும் படியுங்களேன் – நெல்சனுக்கு NO.! நானே கதை எழுதுகிறேன்.! களத்தில் குதித்த சூப்பர் ஸ்டார்.!
பீஸ்ட் திரைப்படத்திற்கு முன்னர் மார்ச் 10 ஆம் தேதி எதற்கும் துணிந்தவன் ரிலீஸ் ஆக உள்ளது. அதற்கான வெளிநாட்டு பிசினெஸை சன் பிக்ச்சர்ஸ் ஆரம்பித்துள்ளது.
ஆனால், நடந்தது பீஸ்ட் வியாபரமாம். அனைவரும் பீஸ்ட் திரைப்படத்தை விலை பேச வெளிநாட்டு உரிமைக்காக பீஸ்ட் திரைப்படத்திற்கு 38 கோடி கூறியதாம் . இதுவரை விஜய் படம் அவ்வளவு விலைக்கு சென்றதில்லை. தற்போது பீஸ்ட் அதனை முறியடித்துள்ளது என கூறப்படுகிறது.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…