Categories: Cinema News latest news

இன்னும் இத்தனை கோடி வசூலானாத்தான் பீஸ்ட் படம் லாபம்… கசிந்த தகவல்…

விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்மறை விமர்சங்களால் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. முதல் நாளில் ரூ.36 கோடிக்கும் மேல் வசூல் செய்த இப்படம் அடுத்த நாளில் இருந்து குறைவான வசூலையே பெற்றது.

ஒருபக்கம் பீஸ்ட் படம் சரியில்லை என்கிற விமர்சனமும், ஒருபக்கம் கேஜிஎப்-2 படம் மாஸாக இருக்கிறது என்கிற விமர்சனமும் எழுந்ததால் ரசிகர்கள் கேஜிஎப்-2 ஓடும் திரையரங்குகள் பக்கம் சென்றனர். எனவே, பீஸ்ட் படத்திற்கு தியேட்டர்கள் குறைக்கப்பட்டு கேஜிஎப்-2 படத்திற்கு தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பீஸ்ட் படம் வெளியாகி 7 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இப்படம் ரூ.143.72 கோடியை வசூல் செய்துள்ளது. கேஜிஎப் திரைப்படம் 55 கோடியை வசூல் செய்துள்ளது. இதில் ஆச்சர்யம் என்னவெனில், ஒரு கன்னட திரைப்படத்தின் தமிழ் ரீமேக் விஜய் படத்திற்கு போட்டியாக களம் இறங்கி இத்தனை கோடி வசூல் செய்துள்ளது ஆச்சர்யமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த வசூல் எல்லாம் பீஸ்ட் படத்திற்கு செல்ல வேண்டியது. ஆனால், அப்படத்திற்கு கிடைத்த எதிர்மறை விமர்சனங்களினால் கேஜிஎப்2 படத்திற்கு சென்றுவிட்டதுதான் சோகம்..

இந்நிலையில், பீஸ்ட் படம் வெளியாகி ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில் இப்படம் வெற்றியடைய வேண்டுமெனில் இன்னும் ரூ.30 கோடியை வசூலிக்க வேண்டும் என திரையுலக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா