Connect with us

Cinema News

அக்ரிமெண்டால் வந்த சோதனை.! புலம்பும் திரையரங்குகள்.! கூவி கூவி விற்கப்படும் பீஸ்ட் டிக்கெட்ஸ்.!

கடந்த வாரம் முழுக்க, ஏன் இந்த வாரம் தொடக்கம் வரை இன்னும் கே.ஜி.எப் 2 மற்றும் பீஸ்ட் வசூல் பற்றிய பேச்சுக்கள் குறையவேயில்லை. ஆனால்,ஆரம்பத்தில் இருந்த தளபதி விஜயின் பீஸ்ட் படத்திற்கு இருந்த எதிர்பார்ப்பு முதல் 5 நாள் தான். அடுத்து உண்மையில் கே.ஜி.எப் ராக்கி பாய் ராஜ்ஜியம்தான்.

இதில், தளபதியின் பீஸ்ட் படத்திற்க்கு தான் ரிலீஸ்க்கு முன்பு வரையில் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. கே.ஜி.எப் 2 எனும் படம் வருகிறது என்கிற எண்ணம் கூட பலருக்கு மறந்து இருந்தது. அதனை பயன்படுத்தி கொண்டு,தமிழகத்தில் முக்கால்வாசி திரையரங்குகளில் பீஸ்ட்டை களமிறங்கியது உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம்,

தியேட்டர்காரகளும் பீஸ்ட் படத்தை நம்பி, களமிறங்கினர். அவர்கள் எதிர்பார்த்தது போலவே, முதல் வாரம்  நாட்கள் விடுமுறை என்பதால் முதல் 5 நாட்கள் படத்திற்கு அட்வான்ஸ் புக்கிங் கோலாகலமாக இருந்தது. அதனால், கே.ஜி.எப் 2 திரைப்படத்திற்கு குறைவான திரையரங்குகள், குறைவான காட்சிகளே ஒதுக்கப்பட்டன.

இதையும் படியுங்களேன் – புது மாப்பிளையை பாடாய் படுத்திய ராக்கி பாய்.! நாங்க எந்த எல்லைக்கும் போவோம்.!

பல்வேறு ஒற்றை திரை திரையரங்குகள் பீஸ்ட் திரைப்படத்தையே களமிறங்கின. ஆனால், கே.ஜி.எப் 2 ரிலீசுக்கு பிறகு நிலைமை தலைகீழானது. கே.ஜி.எப் எந்த திரையரங்கில் எத்தனை மணி காட்சி ஓடினாலும் பரவாயில்லை என் ரசிகர்கள் குவிந்தனர். 1 மணி காட்சி, 4 மணி காட்சி, 8 மணி காட்சி என ப்ரொஜெக்ட்டரை கூட ஆப் செய்யாமல் பல திரையரங்குகளில் படம் சக்கை போடு போட்டுள்ளது.

இது குறித்து வேலூரில் ஒரு திரையரங்கம் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டது என்னவென்றால், பீஸ்ட் டிக்கெட்டுகள் நிறைய இருக்கிறது. அதனால் விரைவாக புக் செய்யுங்கள். துரதிஷ்டவசமாக கே.ஜி.எப் 2 திரைப்படத்தை அக்ரிமென்ட் படி எங்களால் திரையிட முடியவில்லை. என வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம் என பதிவிட்டு இருந்தார்.

author avatar
Manikandan
Continue Reading

More in Cinema News

To Top