Categories: Cinema News latest news

வெறித்தனமான லாபம்.! பீஸ்ட் தயாரிப்பாளருக்கு அடித்த மிக பெரிய ஜாக்பாட்.!

தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் திரைப்படம் விறுவிறுப்பாக ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. இந்த படம் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. தயாரிப்பு தரப்பு இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

படம் முழுக்க ஷாப்பிங் மால் தான் முக்கிய பாத்திரமாக இருக்கும். அதனை செட் அமைத்து படக்குழு பிரமாண்டமாக ஷூட் செய்து முடிந்துவிட்டது. அப்போது அந்த செட்டிற்கு மட்டும் சுமார் 8 கோடி செலவானதாம்

இதையும் படியுங்களேன் – வேறு வழியில்லாமல் ஒத்துக்கொண்ட தியேட்டர்காரர்கள்.! வலிமை 1000 தியேட்டர்களில்…

ஆனால், அதெல்லாம் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒரு பெரிய விஷயமாகவே இல்லை. அதாவது, அந்த ஷாப்பிங் மால் செட்டில் ஒரு பெரிய நகை கடை தனது விளம்பரத்திற்காக அந்த செட் செலவை ஏற்றுக்கொண்டு விட்டது. மேலும் படத்தில் வரும் நகை கடை அந்த கடை பெயரில் இருக்கும் படி அக்ரிமண்ட் போட்டு விட்டது.

இது அந்த நகை கடைக்கு வாழ்நாள் முழுவதும் பெரிய விளம்பரமாக அமைந்துவிடும். பீஸ்ட் படம் திரையரங்கில், தொலைக்காட்சியில், OTT தளத்தில் என எதில் திரையிட்டாலும், கடை வந்துவிடும் என்பதால் இந்த ராஜ தந்திரத்தை செய்துள்ளது. படக்குழுவிற்கும் இது செம லாபத்தை கொடுத்துள்ளது.

Manikandan
Published by
Manikandan