Categories: Cinema News latest news

தளபதியின் பீஸ்ட் பார்த்த ஷாலினி அஜித்.! இது எங்கே? எப்போ நடந்தது.?!

தளபதி விஜய் நடித்து அண்மையில் ரிலீஸான திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இருந்தாலும் விஜய் படம் என்றால் குடும்பங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் என்பதாலும், இது வார விடுமுறை என்பதாலும் இந்த வாரம் முழுக்க தியேட்டர்காரர்களுக்கு நல்ல கலெக்ஷனாக தான் இருந்து வருகிறது.

இந்த திரைப்படத்தை பலரும் பார்த்து தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக இருக்கும் என நினைத்த ரசிகர்களுக்கு, இந்த படம் சற்று ஏமாற்றத்தையே கொடுத்தது. குறைந்த ஆக்சன் ஓரளவு காமெடி என்று படம் இருக்கிறது என்று விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.

இந்த திரைப்படத்தை ரஜினிகாந்த் தொடங்கி பலரும் பார்த்துவிட்டனர். தற்போது வந்த தகவலின்படி இந்த திரைப்படத்தை அஜித் குமாரின் மனைவி ஷாலினி அஜித்குமார் சென்னை சத்யம் திரையரங்கில் இந்த திரைப்படத்தை தன் குடும்பத்தோடு பார்த்தார் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்களேன் – இதெல்லாம் உங்களுக்கு தேவையில்லாத வேலை.! தளபதி-66 படகுழுவுக்கு அறிவுரை கூறும் ரசிகர்கள்.!

அஜித்தும் விஜய்யும் திரையில் எதிரெதிர் துருவங்களாக இருந்தாலும், நிஜ வாழ்க்கையில் இவர்கள் இருவரும் நண்பர்களே. அப்படித்தான் தற்போதும் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விஜய் படம் என்று ஒதுங்கி விடாமல் அந்த படமும் எப்படி இருக்கிறது என்று வந்து பார்த்து விட்டு சென்றிருக்கிறார் அஜித்தின் மனைவி ஷாலினி அஜித்.

Manikandan
Published by
Manikandan