சினிமா உலகில் பலருக்கு வாய்ப்புகள் உடனடியாக கிடைத்துவிடும். பலருக்கு அவர்களின் நிலையை பொருத்து வருடங்கள் கழித்து வாய்ப்புகள் கிடைக்கும். இன்னும் பலருக்கு கடைசிவரை வாய்ப்புகள் கிடைப்பதில்லை.
வாய்ப்புகளை உருவாக்க தெரிந்தவர்களும், அந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்த தெரிந்தவர்கள் மட்டுமே சினிமாவில் தற்போது வரை சாதித்து வருகின்றனர் என்பது நிதர்சனமான உண்மை. இந்த உண்மை தெரியாதவர்கள் இன்னும் சினிமாவில் எப்படி சாதிப்பது என்று தங்கள் திறமையை மட்டும் நம்பி போராடி வருகின்றனர்.
இதுகுறித்து லிஃப்ட் பட நாயகன் கவின் ஒரு பேட்டியில் குறிப்பிடும்போது, ‘நான் இயக்குனர் நெல்சன் உடன் நெடுங்காலமாக பயணித்து வருகிறேன். என்னுடைய வாழ்விலும் சில ஏற்ற இறக்கங்கள் உண்டு. அப்போது என்ன செய்வது என்று தெரியாது.
இதையும் படியுங்களேன் – அடுத்த நாயகி நயன்தாராவா? பயந்து ஒதுங்கி அடங்கிபோன கவின்.!
அப்போது அண்ணன் நெல்சன் அவர்களிடம் கேட்பேன். அப்போது அவர் எனக்கு சில அறிவுரை கூறினார். அதாவது, இந்த சினிமா உலகில் திடீரென்று புயல் வீசும். பலமான காற்று அடிக்கும். திடீரென தென்றல் காற்று வீசும். இதையெல்லாம் தாண்டி நீ சினிமாவில் இருக்கிறீயா என்பது மட்டுமே கேள்வி.
சினிமாவில் தொடர்ந்து ஏதோ ஒரு பணியில் இருந்துகொண்டே தன்னுடைய திறமையை வளர்த்து கொண்டே இருக்க வேண்டும். ஒரு நேரத்தில் நீ செய்த பணி உன்னை வேறு ஒரு இடத்திற்கு கொண்டு செல்லும். எப்படி இருந்தாலும் சினிமாவை விட்டு செல்லக் கூடாது. அதற்கு உண்மையாக இருக்கவேண்டும் என்று கூறினார். அந்த ஒரு அறிவுரையை தற்போது வரை நான் கடைபிடித்து வருகிறேன். என்று நெகிழ்ச்சியாக தெரிவித்தார்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…