Categories: Cinema News latest news

அண்ணாத்த படத்தால் பீஸ்ட்க்கு வந்த சிக்கல்: இதென்னடா விஜய்க்கு வந்த சோதனை

தீபாவளி என்றாலே புத்தாடை, இனிப்பு, பட்டாசு என்பதை தாண்டி புதுப்படம் வெளியாகும் என்ற மகிழ்ச்சி தான் அனைவருக்கும் இருக்கும். அந்த வகையில் இந்தாண்டு சூப்பர் ஸ்டார் தீபாவளியாக அமைந்துள்ளது. ஆம் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள அண்ணாத்த படம் தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

தர்பார் படத்திற்கு பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு திரையில் ரஜினியை பார்க்க உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இது ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது.

இந்த இரண்டு படங்களுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. அது என்னவென்றால் இரண்டு படங்களையுமே சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்துள்ளது. ஆனால் தற்போது இதுதான் பிரச்சனையாகவே உள்ளதாம். ஆம் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 70 சதவீதம் முடிந்துவிட்டது. இன்னும் சில பாடல்களும் காட்சிகளும் மட்டுமே படமாக்கப்பட வேண்டி உள்ளது.

இந்நிலையில் படத்தின் முதல் சிங்கிள் பாடலை தீபாவளிக்கு வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருந்தனர். ஆனால், தற்போது அந்த முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாம். ஏனென்றால் தீபாவளி அன்று தான் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள அண்ணாத்த படம் வெளியாகிறது.

எனவே அதே நாளில் பீஸ்ட் படத்தின் பாடலை வெளியிட்டால் தேவையில்லாத கவனசிதறல் ஏற்படும் என்பதால் பாடல் வெளியீட்டை படக்குழுவினர் தள்ளி வைத்து விட்டார்களாம். இதனால் தீபாவளி அன்று பீஸ்ட் படத்தின் பாடல் வெளியாகும் என ஆவலுடன் காத்திருந்த விஜய் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ராம் சுதன்
Published by
ராம் சுதன்