Categories: Cinema News latest news

ஹிந்தி மொழியை கிழித்தெறியும் விஜய்.! அப்படி என்னதான் சொன்னார் தெரியுமா.?!

தளபதி விஜய் நடிப்பில் இன்று கோலாகலமாக வெளியாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். திரைப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் அதிகமாக வர தொடங்கியுள்ளன. படம் காமெடி, ஆக்சன் கலந்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தை நெல்சன் இங்கியுள்ளார்.

இப்பட இயக்குனர் ஓர் விஜய் ரசிகர் என்பதால், விஜய்க்கு ஏற்ற மாஸ் கமர்ஷியல் கதையை தயார் செய்து அதனை கட்சிதமாக படமாக்கியுள்ளார். இதில் போக்கிரி பட ரெபரென்ஸ் கூட இருக்கும். அத்தனையும் கட்சிதமாக பொருத்தியிருந்தார் இயக்குனர் நெல்சன் .

இதில் விஜய்க்கு வசனங்கள் குறைவுதான். இருந்தாலும், அந்த வசனங்கள் நச் என்று இருந்தது என்றே கூறலாம். இப்படத்தில் விஜய் ஹிந்தியை எதிர்க்கும் வண்ணம் வசனம் பேசியிருந்தார் என்று கூறப்பட்டது. மேலும், விஜய் இந்தியை கிழித்தெறிந்துவிட்டார் எனும் அளவுக்கு இணையத்தில் செய்திகள் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்களேன் – மீண்டும் பழைய ஃபார்முலா.! தளபதியை வைத்து நெல்சன் ஜெயித்தாரா? தோற்றாரா.? முழு விமர்சனம் உள்ளே..,

ஆனால், படத்தில் தீவிரவாதிகளிடம் விஜய் பேசுவார் அவர்கள் இந்தியில் பேசுவார்கள். அதற்க்கு விஜயும் இந்தியில் பதிலளித்து வருவார். ஆனால் , ஒரு கட்டத்திற்கு மேல் விஜய் கடுப்பாகி, ‘இதுக்கு மேல் இந்தி பேச முடியாது உனக்கு வேணும்னா நீ தமிழ் கத்துக்கோ’ என பதிலளித்து விடுவார்.

இதனை குறிப்பிட்டு தான் இணையவாசிகள், விஜய் இந்தியை கிழித்தெறிந்துவிட்டார் எனும் ரேஞ்சுக்கு பேசி வருகின்றனர். ஆனால் விஜயும் இதில் கொஞ்சம் ஹிந்தி பேசியிருப்பார் என்பதே உண்மை.

Manikandan
Published by
Manikandan