Categories: Cinema News latest news

தளபதி விஜயை நிக்க வைத்து கேள்வி கேட்ட நபர்.! வெளியான புத்தம் புது தகவல்..,

தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். பூஜா ஹெக்டே , செல்வராகவன் என பலர் நடித்துள்ளனர். இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளது.

இதில் விஜய் ராணுவ வீரராக நடிக்கிறார். ஒரு ஷாப்பிங் மாலை தீவிரவாத கும்பல் பணயமாக பிடித்துவிடுகிறது. அதனை  அந்த ராணுவ வீரர் தனக்கு கிடைத்த நபர்களை வைத்து எப்படி இந்த ஆபரேஷனை முடிக்கிறார் என்பதே கதை என கூறப்படுகிறது. எல்லாம் ஏப்ரல் 13ஆம் தேதி தெரிந்துவிடும்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இப்படத்தில் இருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் வெளியாகி  நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கும் என நம்பியிருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இதையும் படியுங்களேன் – ஷங்கர் படத்தை அஜித் தவிர்த்தது ஏன்.?! பின்னணியில் இவளோ பெரிய கதை இருக்கா.?!

இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக படக்குழு ஓர் டிவி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளதாம். இந்த நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாகும் என கூறப்படுகிறது. இதில் தளபதி விஜய் கலந்துகொள்கிறார். இதில் தொகுப்பாளராக யார் விஜயிடம் கேள்வி கேட்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கையில்  தற்போது ஓர் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இயக்குனர் நெல்சன் தான் விஜயை கேள்வி கேட்கும் அந்த தொகுப்பாளராம் .

Manikandan
Published by
Manikandan