×

ஆண்டியானாலும் த்ரிஷாவின் அழகை பாதுகாக்கும் பியர், எண்ணெய்யின் ரகசியம்! உண்மைதாங்க...

முறையான உடற்பயிற்சியும் சரியான உணவுப் பழக்கமும் இருந்தா, இளமையும் அழகும் ஆரோக்கியமும் எப்போதும் நம்ம கூடவே இருக்கும் என த்ரஷா தெரிவிக்கிறார். 
 

மேலும் அவர் கூறுகையில், எங்க வீட்ல எல்லாருமே ஃபிட்னஸ் பிரியர்கள். நடிக்க வர்றதுக்கு முன்னாடியும் நாங்க அப்படித்தான். ஜிம் போகறது, வாக்கிங், யோகான்னு எனக்கு தினமும் ஏதாவது ஒரு ஆக்டிவிட்டி அவசியம்.

எங்கக் குடும்பமே டயட் சாப்பாட்டுக்கு மாறி, பல வருஷங்கள் ஆச்சு. யாருமே சாதம் அதிகம் எடுத்துக்க மாட்டோம். அதிக எண்ணெய், மசாலா, கிழங்கு வகையறாக்கள் இருக்காது. கொழுப்பு நீக்கின ஸ்கிம்டு மில்க்தான் உபயோகிப்பேன். காலை சாப்பாட்டுக்கு இட்லி, தோசை, பிரெட் ஆம்லெட், டோஸ்ட்னு வழக்கமான அயிட்டங்கள்தான். ஆனாலும் எண்ணெயோ, நெய்யோ இருக்காது. 

ஒவ்வொரு வேளை சாப்பாடு எடுக்கும் போதும், ஒரு டம்ளர் ஜூஸ் குடிக்கிறது வழக்கம். எண்ணெய் இல்லாம சமைக்கிற பாத்திரங்கள்லதான் சமைப்பேன். எண்ணெய் தேவைப்படற இடங்கள்ல ஆலிவ் ஆயில் உபயோகிப்போம். ‘லைட் வெர்ஜின் ஆலிவ் ஆயில்’னு கிடைக்குது. என்னதான் காஸ்ட்லியான எண்ணெயானாலும், கொழுப்பு இல்லாம இருக்காது. கெட்ட கொழுப்பு அதிகமா உள்ள மற்ற எண்ணெய்களைவிட, உடம்புக்குத் தேவையான நல்ல கொழுப்பு உள்ள ஆலிவ் ஆயில் ரொம்ப பெஸ்ட்.

ஆனால் நண்பர்களுடன் பார்ட்டிக்கு போவது எனக்கு மிகவும் பிடிக்கும் என தெரிவித்துள்ளார். இது ஒரு புறம் இருக்க த்ரஷா பார்ட்டியில் அடிக்கும் பியர் தான் அவர் அழகை மெருகூட்டுகிறது என தெரிவிக்கின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News