பீப்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட பிரபலங்கள் ; செப்டம்பரில் ரிலீஸ்

 
beep

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், அந்த வரிசையில் இணையும் புதிய க்ரைம் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது ‘பீப்’.

எம் குவெஸ்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தை இல. சண்முகசுந்தர் எழுதி இயக்கியுள்ளார். ‘நஞ்சுபுரம்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற ராகவ் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ள நிலையில், பிரேர்ணா கண்ணா, யாமினி, ‘சார்பட்டா பரம்பரை’ பிரியதர்ஷினி மற்றும் நிதிஷ் வீரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு தெலுங்கு இசையமைப்பாளர் பிரசாந்த் விஹாரி இசையமைத்துள்ளார். 

மேலும், "'பீப்' படத்தின் கதைக்களம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. ஒரு சாதாரண புகைப்படத்தை வைத்து மனிதர்களின் மனநிலையையும், அதில் மறைந்திருக்கும் தடயங்களையும் கண்டுபிடிக்கும் அபார திறன் கொண்ட இளைஞன், ஒரு மர்ம மரணத்தின் பின்னணியை எப்படி வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறார் என்பதுதான் படத்தின் மையக்கரு.

இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, நடிகர்கள் நட்டி நட்ராஜ், தீபக் தினகர், நடிகைகள் சுகாசினி மற்றும் கோமல் சர்மா ஆகியோர் ஜூலை 29-ஆம் தேதி வெளியிட்டு படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

வழக்கமான க்ரைம் த்ரில்லர்களிலிருந்து மாறுபட்ட அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் நோக்கில் உருவாகியுள்ள ‘பீப்’, தனது தனித்துவமான கதைக்களம் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதையால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்கனவே அதிகரித்துள்ளது. மேலும், இப்படம் வரும் செப்டம்பர் மாதம் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Tags

From Around the web