அசுரனுக்கு முன்பே மஞ்சுவாரியார் நடிக்க இருந்த படம்.. அட அஜித்தின் அந்தப் படமா?
பிறமொழி நடிகர்களின் ஆதிக்கம்:
தமிழ் சினிமாவில் பிறமொழி நடிகர்களின் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கின்றது. நடிகர்களுக்கு இணையாக பிற மொழியில் இருந்து நடிகைகளும் தமிழ் மொழிக்கு வந்து தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு விடுகின்றனர். அந்த வகையில் சென்னையில் பிறந்தவரானாலும் மலையாளத்தில் புகழின் உச்சியில் இருப்பவர் சாய் பல்லவி.
அவர் இப்போது தமிழ் ரசிகர்களின் கனவு நாயகியாகவே மாறிவிட்டார். அதைப்போல மஞ்சு வாரியார் மலையாளத்தில் லேடி சூப்பர் ஸ்டார். இவரும் இப்போது தமிழ் படங்களில் நடிக்க வந்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் குடிபெயர்ந்து விட்டார். தமிழில் முதன் முதலில் இவர் நடித்த திரைப்படம் அசுரன்.
சொந்தக் குரலிலேயே டப்பிங்:
இவர் நடிக்கும் திரைப்படங்களில் இவருக்கு என டப்பிங் யாருமே கிடையாது. தனது சொந்த குரலிலேயே தான் பேசுவார். அசுரன் திரைப்படத்திலும் திருநெல்வேலி பாஷையில் அச்சு பிறழாமல் நன்றாக பேசி இருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதற்கு அடுத்தபடியாக துணிவு படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஆக்ஷன் ஹீரோயினாக நடித்து கலக்கி இருந்தார்.
வேட்டையன் திரைப்படத்திலும் ரஜினிக்கு ஜோடியாக அதிலும் ஒரே ஒரு காட்சியில் ஆக்ஷன் காட்சியில் நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.இப்போது விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திலும் மகாலட்சுமி கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.இந்த நிலையில் மஞ்சுவாரியார் அசுரன் திரைப்படத்திற்கு முன்பே ஒரு தமிழ் படத்தில் நடிக்க வேண்டி இருந்ததாம்.
அழுத ஐஸ்வர்யா ராய்:
ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் அந்த வாய்ப்பு தவறிவிட்டது என அந்த படத்தின் இயக்குனர் கூறி இருக்கிறார். அது வேறு எந்த படமும் இல்லை. அஜித் நடிப்பில் சூப்பர் ஹிட்டான கண்டுகொண்டே கண்டுகொண்டேன் திரைப்படம்தான். அந்தப் படத்தின் இயக்குனரான ராஜீவ் மேனனுக்கு முதலில் ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்க எண்ணமே இல்லையாம்.
முதலில் மஞ்சுவாரியரை தான் அணுகியிருக்கிறார். மஞ்சு வாரியர் கதை என்ன? யார் யார் நடிக்கிறார்கள் என்பதையெல்லாம் கேட்டுவிட்டு ஓகே என சொல்லி இருக்கிறார். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் அவர் நடிக்க முடியாமல் போனது. அடுத்து கன்னட நடிகை சௌந்தர்யாவை அவர் அணுகியிருக்கிறார். அவர் இரண்டு ஹீரோயின் என்பதால் மறுத்துவிட்டாராம் .
அதன் பிறகு தான் கடைசியாக ஐஸ்வர்யா ராயை போய் பார்த்திருக்கிறார். அவர் படத்தின் கதையை கேட்டு அழுதே விட்டாராம். நான் கண்டிப்பாக நடிக்கிறேன் என மிகவும் சந்தோஷமாக கூறினார் என ராஜீவ் மேனன் ஒரு பேட்டியில் கூறினார். இந்தப் படத்தின் கதையை அஜித்திடம் கூறும் போது அந்த சமயம் அஜித் அப்போல்லோவில் அட்மிட் ஆகியிருந்தாராம். கதையை கேட்டு அஜித்தும் நான் பண்றேன்ஜி என கூறியிருக்கிறார்.