Categories: Cinema News latest news

வில்லனாக வந்த விஜய்!.. கடைசி நேரத்தில் பின் வங்கிய குட்டி சூர்யா படம்!…

விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவின் பீனிக்ஸ் திரைப்படம் நாளை ரிலீஸாகாததன் காரணம் குறித்த தகவல் வெளியாகி இருக்கின்றது.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் செல்ல மகன் சூர்யா. இவர் ஹீரோவாக அறிமுகமாகும் திரைப்படம் பீனிக்ஸ் வீழான். ஸ்டன்ட் மாஸ்டர் அனல் அரசுவின் இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகி வருகின்றது. இப்படம் மூலமாக சூர்யா கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமாகின்றார். இந்த திரைப்படம் நாளை நவம்பர் 14ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தார்கள்.

இதையும் படிங்க: SaiPallavi: சாய்பல்லவியின் கிரஷ் யாரு தெரியுமா? அட இவ்ளோ ஓப்பனா சொல்றாங்க.. மனைவிக்கு தெரிஞ்சா?

இதையடுத்து படத்தை ப்ரோமோஷன் செய்யும் வகையில் பேட்டியும் கொடுத்து வந்தார் சூர்யா. இதில் பேச தெரியாமல் பேசி பல சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டார். இது தொடர்பான ட்ரோல்கள் இணையதள பக்கங்களில் வைரலாகி வந்தது. மேலும் பெரிய நடிகரான சூர்யாவின் நடிப்பில் உருவாகியிருக்கும் கங்குவா திரைப்படம் நாளை வெளியாகும் நிலையில் குட்டி சூர்யாவின் பீனிக்ஸ் படத்தை அந்த படத்துடன் ரிலீஸ் செய்யலாமா? என்று பலரும் கூறி வந்ததார்கள்.

ஆனால் கடைசி நேரத்தில் பின்வாங்கி விட்டனர் படக்குழுவினர். அந்த வகையில் இன்று காலை பீனிக்ஸ் வீழான் படம் நாளை வெளியாகாது என்று அதிகாரப்பூர்வமாக படக்குழு சார்பாக அறிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக அவர்கள் தெரிவித்திருந்ததாவது: ‘பெரிதும் எதிர்பார்க்கப்படும் படமான பீனிக்ஸ் வீழான் ஏற்கனவே திட்டமிட்டபடி நாளை ரிலீஸ் ஆகாது.

phoenix

சென்சார் போர்டு பரிந்துரை செய்த மாற்றங்களால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. புது ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும். உங்களின் ஆதரவு மற்றும் பொறுமைக்கு நன்றி. பீனிக்ஸ் வீழான் முன்பை விட ஸ்ட்ராங்காக மறுபடியும் வரும்’ என்று தெரிவித்திருந்தார்கள். இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது நல்லது தான் என்று சினிமா ரசிகர்கள் பலரும் கூறி வந்தார்கள்.

இந்நிலையில் இப்படம் நாளை ரிலீஸ் ஆகாததற்கு தற்போது காரணம் வெளியாகி இருக்கின்றது. அதாவது இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் கொடி போன்ற கலரில் சில கொடியை படத்தில் பயன்படுத்தி இருப்பதால் சிக்கல் நீடித்து வந்தது. இது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

இதையும் படிங்க: கங்குவா படத்திற்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஐகோர்ட்!… ஆனா ஒரு கண்டிஷன்?!…

இதனால் அதை மாற்றுவதற்கு படக்குழுவினர் முயற்சி செய்து வருகிறார்கள். அந்த காட்சிகள் அனைத்தையும் விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவை வைத்து ரீசூட் செய்வதற்கு படக்குழுவினர் முடிவு செய்திருப்பதால் தான் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்திருப்பதாக கூறப்படுகின்றது. இந்த காரணத்தினால் தான் நாளை இந்த திரைப்படம் வெளியாகவில்லை என்று சினிமா வட்டாரங்களில் கூறி வருகிறார்கள்.

ramya suresh
Published by
ramya suresh