Categories: Cinema News latest news throwback stories

சரக்கு கடையில் என்னை அடகு வச்சிட்டு போயிட்டாங்க!.. படாத பாடுபட்டு சினிமாவுக்கு வந்த செந்தில்!…

கோலிவுட்டில் பிரபலமான காமெடி நடிகர்களில் முக்கியமானவர் செந்தில். தமிழில் இதுவரை 200க்கும் அதிகமான திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். 1980 இல் இளமை கோலம் என்கிற திரைப்படத்தின் மூலமாக இவர் அறிமுகமனார்.

பிறகு கவுண்டமணியுடன் செந்தில் காம்போ போட்ட பிறகு வெற்றிக்கரமாக பல படங்களை கொடுத்தனர். அப்போது பிரபலமாக இருந்த முக்கால்வாசி நடிகர்களுடன் செந்தில் நடித்துள்ளார்.

senthil

அவர் நடித்த திரைப்படங்களில் கரகாட்டக்காரன், வைதேகி காத்திருந்தாள் போன்றவை முக்கியமான திரைப்படங்கள். தற்சமயம் லால் சலாம், தீயோர்க்கு அஞ்சேல் போன்ற திரைப்படங்களில் செந்தில் நடித்து வருகிறார்.

சினிமாவிற்கு வருவதற்கு முன்பே செந்தில் நாடகங்களில் நடித்து வந்தார். அப்போதே நடிகர் கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் பழக்கம் இருந்தது. ஆனால் செந்திலுக்கு முன்பே கவுண்டமணி தமிழ் சினிமாவில் அறிமுகமாகிவிட்டார்.

senthil

நாடகங்களில் நடித்த போது வில்லன், கதாநாயகன் என பல கதாபாத்திரங்காளில் நடித்துள்ளார் செந்தில். ஆனால் இவர் நாடகத்திற்கு வருவதற்கு முன்னால் ஒரு சுவாரஸ்யமான கதை நடந்துள்ளது. முதலில் நடிப்பதற்கான ஆசையே இல்லாமல் இருந்துள்ளார் செந்தில்.

நடிப்பதற்கு காரணமாக அமைந்த சம்பவம்:

ஒருமுறை மது அருந்துவதற்காக நண்பர்களோடு மதுக்கடைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு நண்பர்களிடம் காசு இல்லாததால் செந்திலை அங்கு அடமானம் வைத்துவிட்டு சென்றுள்ளனர். இதனால் செந்தில் அங்கேயே பணிப்புரிந்து கொண்டிருந்துள்ளார்.

senthil

அப்போது அங்கு வந்த நாடக குழு ஒன்றோடு பழக்கமாகி நாடகங்களில் நடிக்க சென்றுள்ளார். அதன் வழியாகவே பிறகு சினிமாவில் வாய்ப்பை பெற்றார். இது அனைத்திற்கும் அவர் மதுக்கடையில் அடமானம் வைக்கப்பட்டதே காரணமாக அமைந்துள்ளது. ஒரு பேட்டியில் இதை செந்தில் கூறியுள்ளார்.

Published by
Rajkumar